22.01.2016 மன்மத வருடம். தை மாதம். 8 ஆம் நாள். வெள்ளிக்கிழமை

Published on 2016-01-22 07:55:32

சுக்கிலபட்ச திரயோதசி திதி காலை 8.55 வரை. அதன் மேல் சதுர்தசி திதி. திருவாதிரை நட்சத்திரம் முன்னிரவு 8.54 வரை. பின்னர் புனர்பூசம் நட்சத்திரம். சீரார்த்தி திதி. வளர்பிறை. சதுர்தசி. சித்தியோகம். மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம  நட்சத்திரங்கள் அனுஷம், கேட்டை. சுபநேரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30 – 5.30. ராகு காலம் 10.30 –12.00. எமகண்டம் 3.00 – 4.30. குளிகை காலம் 7.30 –9.00. வார சூலம் –மேற்கு (பரிகாரம் – வெல்லம்).

மேடம்: பேராசை, நஷ்டம்

இடபம்: தொல்லை, சங்கடம்

மிதுனம்: அதிர்ஷடம், சங்கடம்

கடகம்: கவனம், எச்சரிக்கை

சிம்மம்: திறமை, ஆர்வம்

கன்னி: மகிழ்ச்சி, சந்தோஷம்

துலாம்: அமைதி, நிம்மதி

விருச்சிகம்: நஷ்டம், கவலை

தனுசு: பொறுமை, நிதானம்

மகரம்: புகழ், பெருமை

கும்பம்: வாழ்வு, வளம்

மீனம்: தடை, தாமதம்

தொண்டர் அடிப்பொடியாழ்வார் அருளிய திருப்பள்ளியெழுச்சி "புலம்பின புட்களும் பூம்பொழில் வாய் இலங்கையர் கோன் வழிபாடு செய்கோயில் எம்பெருமான். பள்ளி எழுந்தருளாயே பூஞ்சோலைப் பறவைகள் கூட்டிசை ஆரவாரஞ் செய்கின்றன. இரவு கழிந்தது. காலை நேரம் வந்தது. கீழைத்திசையில் கடலோசை கிளர்ந்தது. தேனைப் பருகிய வண்டுகள் இசைக்கின்றன. பலவகைப் பூக்களால் தொடுக்கப்பட்ட அழகிய மாலைகள் ஏந்தி தேவர்கள் நின் திருவடியினை  வணங்குவதற்கு வந்து நின்றனர். இலங்கை விபிடணன் வழிபாடு செய்யும் திருவரங்கனே! பள்ளி எழுந்தருள்க (ஆழ்வார் திருவடிகளே சரணம்.) 

("அறிவிற்கு முற்றுப்புள்ளி வைக்காதீர்கள். சாகும் வரை உங்கள் அறிவுக் கண்கள் திறந்தே இருக்கட்டும்.")

ராகு, புதன் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள் 8 ,6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)