“எனக்கு மர­ணத்தில் வேதனை இல்லை. வாழ்வில் தான் வேதனை இருக்­கி­றது. ஆனாலும் நான் வாழத்தான் விரும்­பு­கிறேன்”

2017-05-08 10:27:42

சுக்­கில பட்ச திர­யோ­தசி திதி பின்­னி­ரவு 12.31 வரை. அதன் மேல் சதுர்த்­தசி திதி. அஸ்தம் நட்­சத்­திரம் பகல் 11.12 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை திர­யோ­தசி. சித்­த­யோகம் சம­நோக்கு. நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சதயம், பூரட்­டாதி. சுப­நே­ரங்கள் காலை 9.30– 10.30,  மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார சூலம் –கிழக்கு (பரி­காரம்– தயிர்) சுப­மு­கூர்த்த நாள். சுக்­கில பட்ச சோம மஹா பிர­தோஷ விரதம். சந்­தியா காலத்தில் சிவ வழி­பாடு சிறப்­பா­னது.

மேடம் : நேர்மை, புகழ்

இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம்         : ஆதாயம், இலாபம்

கடகம் : ஊக்கம், உயர்வு

சிம்மம் : அன்பு, பாசம்

கன்னி : பொறுமை, நிதானம்

துலாம் : தெளிவு, அமைதி

விருச்­சிகம் : நன்மை, அதிர்ஷ்டம்

தனுசு : விருத்தி, செல்­வாக்கு

மகரம் : களிப்பு, மகிழ்ச்சி

கும்பம் : அன்பு, ஆத­ரவு

மீனம் : உயர்வு, மேன்மை

இன்று இசை­ஞா­னியார் குரு­பூஜை தினம். தினம் சோழ­வள நாட்டில் திரு­வா­ரூ­ருக்கு அண்­மையில் உள்ள கம­லா­பு­ரத்தில் ஆதி­சைவர் மரபில் திரு­வ­வ­தாரம் செய்து சடை­ய­னாரை மணந்து திரு­நா­வ­லூ­ரரை (சுந்­த­ர­மூர்த்தி நாய­னாரை) ஈன்று இவ்­வு­ல­குக்­க­ளித்து ஈன்ற பொழுதில் பெரி­து­வந்த நற்றாய். சைவம் வளரப் பணி­யாற்றிச் சிவ­னடி சேர்ந்­தவர். முக்தி பெற்ற தினம் சித்­திரை மாதம் சித்­திர நட்­சத்­திரம் 

(“எனக்கு மர­ணத்தில் வேதனை இல்லை. வாழ்வில் தான் வேதனை இருக்­கி­றது. ஆனாலும் நான் வாழத்தான் விரும்­பு­கிறேன்” –ஜாக் பெண்டன்)

சனி, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 5

பொருந்தா எண்கள் : 8, 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி

( விஷ்ணு கோயில் தெஹிவளை)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right