06.05.2017 ஹேவிளம்பி வருடம் சித்திரை மாதம் 23 ஆம் நாள் சனிக்கிழமை

2017-05-08 09:48:08

சுக்கிலபட்ச ஏகாதசி திதி முன்னிரவு 11.18 வரை. பின்னர் துவாதசி திதி. பூரம் நட்சத்திரம் காலை 9.11 வரை. அதன் மேல் உத்திரம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஏகாதசி சித்த யோகம் காலை 9.11 வரை. அதன்பின் மரண யோகம் கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் அவிட்டம். சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30, மாலை 3.00 – 4.00, ராகு காலம் 9.00 –10.30,  எமகண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 7.30, வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்) 

மேஷம்: யோகம், அதிர்ஷ்டம்

ரிஷபம்: புகழ், பெருமை

மிதுனம்: அமைதி, சாந்தம்

கடகம்: நட்பு, உதவி

சிம்மம்: பொறுமை, காரியசித்தி

கன்னி: கஷ்டம், கவலை

துலாம்: சிந்தனை, தெளிவு

விருச்சிகம்: ஓய்வு, அசதி

தனுசு: சலனம், சஞ்சலம்

மகரம்: அன்பு, பாசம்

கும்பம்: நலம், ஆரோக்கியம்

மீனம்: திறமை, முன்னேற்றம். 

இன்று ஏகாதசி விரதம். இதற்கு மோகினி ஏகாதசி என்று பெயர். திருமால் மோகினி அவதாரம் கொண்டு திருப்பாற்கடல் அமிர்தத்தை தேவர்களுக்கு கொடுத்தருளிய நாள். புதன் ஜெயந்தி. புதனையும் திருமாலையும் வழிபடல் உகந்த நாளாகும். 

(“உங்கள் உள்ளத்தில் உழைப்பை விதையுங்கள். வெற்றி அறுவடையாகும்.” – இங்ஸ்)

சுக்கிரன், குரு கிரகங்களின் ஆதிக்க நாளான இன்று

அதிர்ஷ்ட எண்: 9

பொருந்தா எண்கள்: 3 – 6 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள்

ராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right