21.01.2016 மன்­மத வருடம் தை மாதம் 07ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

2016-01-21 09:07:51

21.01.2016 மன்­மத வருடம் தை மாதம் 07ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச துவா­தசி திதி காலை 10.02 வரை. பின்னர் திர­யோ­தசி திதி. மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 9.08 வரை. பின்னர் திரு­வா­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை. திர­யோ­தசி. மரண யோகம். நட்­சத்­திர துவா­தசி. சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் விசாகம், அனுஷம். பிர­தோஷ விரதம். கண்­ணப்பர் நாயனார் குரு பூஜை. சுப­நே­ரங்கள் காலை 10.30 –11.30. பிற்­பகல் 12.30 – 1.30. ராகு­காலம் 1.30 – 3.00. எம­கண்டம் 6.00 – 7.30. குளிகை காலம் 9.00 –10.30. வாரசூலம் – தெற்கு (பரிகாரம் – தையல்)

மேடம் : புகழ், பெருமை

இடபம் : இன்பம், மகிழ்ச்சி

மிதுனம் : உதவி, நட்பு

கடகம் : பொறுமை, அமைதி

சிம்மம் : புகழ், பாராட்டு

கன்னி : ஏமாற்றம், கவலை

துலாம் : வெற்றி, அதிர்ஷ்டம்

விருச்சிகம் : சோதனை, கவலை

தனுசு : பிரயாணம், அலைச்சல்

மகரம் : உயர்வு, மேன்மை

கும்பம் : சுபம், மங்களம்

மீனம் : நன்மை, அதிர்ஷடம்

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருப்பள்ளியெழுச்சி மேட்டு இன மேதிகள் தலைவிடும் ஆயர்கள். ஆட்டிய அடுதிறல் அயோத்தி எம்மரசே அரசே ‘அரங்கத்தமா’ பள்ளி எழுந்தருளாயே, இளைய எருமைகளை மேய்க்கைக்கு விடுகிற இடையர் புல்லாங்குழலிசையும், எருதுகளின் கழுத்து மணிஓசையும் கூடின ஒலி திசையெல்லாம் பரவிவிட்டது. கழனிகளிலுள்ள வண்டுகள் ஆரவாரித்துக் கிளம்பின. அரக்க இனத்தை அழித்த சாரங்க தேவனே! விஸ்வாதிமித்ர யாகத்தை நிறைவேற்றி வன்மையானாய் அயோத்தியை ஆளும் எம். அரசே! அரங்கத்தம்மா! பள்ளி எழுத்தருள்க. (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“முட்டாள் தன் தோழர்களிடமிருந்து கற்றுக் கொள்வதைவிட புத்தசாலி தன் எதிரிகளிடமிருந்து கற்றுக் கொள்கிறான்”)

குரு, ராகு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 5, 9

பொருந்தா எண்கள் : 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள் – வெளிர் நீலம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right