25.04.2017 ஏவி­ளம்பி வருடம் சித்­திரை மாதம் 12 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

2017-04-25 13:19:43

கிருஷ்­ண­பட்ச சதுர்த்­தசி திதி முன்­னி­ரவு 8.18 வரை. அதன் மேல் அமா­வாஸ்யை திதி. ரேவதி நட்­சத்­திரம். முன்­னி­ரவு 9.07 வரை. அஸ்­வினி நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை. சதுர்த்­தசி. சித்­த­யோகம். சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூரம், உத்­திரம். சுப­நே­ரங்கள் காலை 7.30 – 8.30, மாலை 4.30 – 5.30, ராகு­காலம் 3.00 – 4.30,  எம­கண்டம் 9.00 – 10.30, குளிகை காலம்12.00 – 1.30, வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்) போத­யன அமா­வாஸ்யை. சித்­திரை ரேவதி. ஸ்ரீ ரெங்­க­நாதர் ரதோற்­சவம்

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் : நலம், ஆரோக்­கியம்

மிதுனம்         : சுகம், மகிழ்ச்சி 

கடகம் : தனம், சம்­பத்து

சிம்மம் : கவனம், எச்­ச­ரிக்கை

கன்னி : தேர்ச்சி, புகழ்

துலாம் : லாபம், ஆதாயம்

விருச்­சிகம் : வரவு, விருத்தி

தனுசு : லாபம், லக் ஷ்மீகரம்

மகரம் : போட்டி, ஜெயம்

கும்பம் : நற்­செயல், பாராட்டு

மீனம் : மேன்மை , உயர்வு

ஸ்ரீ இரா­மா­னுஜர் தொடர்ச்சி (1017 – 2017) திரு­வ­ரங்கம் ஆல­யத்தில் அன்னக் கூட்டம் வைபவம் நடை­பெறும் வேளை அங்­குள்ள சிறு­வர்கள் காவேரி ஆற்­றங்­க­ரையில் ஒரு கம்பை ஊன்றி அரங்­க­நா­த­ராக உரு­வ­கப்­ப­டுத்தி, பிர­சா­த­மாக ஆற்று மணலை அரி­சாக வைத்து பக­வா­னுக்கும் தாயா­ருக்கும் நிவே­தனம் செய்து, பிர­சா­த­மாக ஆற்று மணலை கையில் வைத்து ஜீயோ, ஜீயோ என்று ஜீய­ராக இருந்த இரா­மா­னு­ஜரை அழைக்க, அவரும் அவ்­வி­டத்­திற்கு வந்து குழந்­தைகள் கொடுத்த மணல் பிர­சா­தத்தை கண்ணில் ஒற்றி, வாயில் போட்டு சாப்­பிட்டு விட்டார். சிஷ்­யர்கள் இரா­மா­னு­ஜ­ரிடம் மண் உண்ட கார­ணத்தை வினவ இளஞ்­சி­று­வர்­க­ளிடம் உள்ள பக்தி வீணாக போகக் கூடாது என்­பதே காரணம் என்றார். (தொடரும்) கேது, குரு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 5,1

பொருந்தா எண்கள்: 7, 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தர்மகர்த்தா ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right