19.01.2016 மன்மத வருடம் தைமாதம் 05ம் நாள் செவ்வாய்கிழமை

Published on 2016-01-19 07:37:49

சுபயோகம்

19.01.2016 மன்மத வருடம் தைமாதம் 05ம் நாள் செவ்வாய்கிழமை

சுக்கிலபட்ச தசமி திதி பகல் 1.19 வரை. அதன் மேல் ஏகாதசி திதி. கார்த்திகை நட்சத்திரம் முன்னிரவு 10.48 வரை. பின்னர் ரோகிணி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஏகாதசி சித்தாமிர்த யோகம். தை கிருத்திகை. கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சித்திரை சுவாதி. சுபநேரங்கள் காலை7.30 –8.30. மாலை 4.30 – 5.30. ராகுகாலம் 3.00 – 4.30 எமகண்டம் 9.00 – 10.30 குளிகை காலம் 12.00 –1.30 வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்)

மேடம் : தனம், வரவு

இடபம் : பொறுமை, நிதானம்

மிதுனம் : விவேகம், வெற்றி

கடகம் : உயர்வு, மேன்மை

சிம்மம் : கவனம், எச்சரிக்கை

கன்னி : நோய், வேதனை

துலாம் : கீர்த்தி, புகழ்

விருச்சிகம் : நன்மை, அதிர்ஷ்டம்

தனுசு : புகழ், பெருமை

மகரம் : நட்பு, உதவி

கும்பம் : தோல்வி, கவலை

மீனம் : போட்டி, ஜெயம்

திருப்பள்ளி யெழுச்சி 02ம் பாசுரம். “கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக்கூர்ந்து குணவிசை மாருதம் இதுவோ”. அழங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த அரங்கத்தமா பள்ளி எழுந்தருளாயே! உரை கீழைக்காற்று செழுமை தங்கிய முல்லைக் கொடியில் உண்டான அழகிய மலர்களின் மணம் கொண்டு வீசுகின்றது. பூம்பள்ளியில் உறங்கும் அன்னங்கள் மழைபோல் சொரிகின்ற பனியால் நனைந்த தங்கள் அழகிய இறக்கைகளை உதறி உறக்கம் விட்டு எழுந்தன. தன்காலை விழுங்கின முதலையின் கோரப் பற்கள் ஊன்ற, அப்பல் நோவுற்ற கஜேந்திரன் துயரைப் போக்கிய அரங்கத்தம்மா. பள்ளி எழுந்தருள்க. (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

சூரியன் சந்திரன் ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள் – நீலம்

இராமரத்தினம்ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)