22.04.2017 ஏவிளம்பி வருடம் சித்திரை மாதம் 9ஆம் நாள் சனிக்கிழமை

2017-04-22 09:21:37

கிருஷ்ணபட்ச தசமி திதி பின்னிரவு 1.12 வரை. அதன்மேல் ஏகாதசி திதி. அவிட்டம் நட்சத்திரம் முன்னிரவு 11.03 வரை. பின்னர் சதயம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை ஏகாதசி. அமிர்த யோகம் மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: பூசம், ஆயில்யம். சுபநேரங்கள்: பகல் 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30, ராகுகாலம் 9.00 – 10.30,  எமகண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 7.30, வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்) கிருஷ்ணபட்ச ஸர்வ ஏகாதசி விரதம்.

மேடம்      : நன்மை, ஆரோக்கியம்

இடபம்      : கோபம், அவமானம்

மிதுனம்     : செலவு, விரயம்

கடகம்      : வரவு, லாபம்

சிம்மம்     : லாபம், லஷ்மீகரம்

கன்னி      : அன்பு, பாசம்

துலாம்      : உயர்வு, மேன்மை

விருச்சிகம்  : நலம், ஆரோக்கியம்

தனுசு       : சுகம், இன்பம்

மகரம்      : சிக்கல், சங்கடம்

கும்பம்     : கவனம், எச்சரிக்கை

மீனம்      : பகை, எதிர்ப்பு

 

இன்று திருநாவுக்கரசர் நாயனார் குருபூஜை. திரு நின்ற செம்மையே செம்மையாகக்கொண்ட நற்றமிழ் வல்ல நாவினுக் கரையர். திருவா மூரில் தோன்றி திருவதிகையில் சிவனருள் பெற்று சித்திரை மாத சதய நாளில் திருப்புகலூரில் சிவனடி சேர்ந்தவர். என் கடன் பணி செய்து கிடப்பதே என பூங்கோயில் தோறும் புலவர்தன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு பூமாலை புனைந்தேத்தி புகழ்ந்துபாடி தலையாரக் கும்பிட்டு உழவாரத்திருப்பணி செய்து 81 ஆண்டுகள் வாழ்ந்து ஆயிரம் பிறைகண்டவர். கருவாய் கிடந்து ஈசன் கழலே நினையும் கருத்துடையார் புழுவாய்பிறக்கிலும் புண்ணியன் தன்னடி மறவாதிருக்க வேண்டியவர். பாடிய பாடல்கள் 3066. அவை 4,5,6ம் திருமுறையாக வகுக்கப் பெற்றுள்ளன.  ராகு, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் : 5,6,3,9

பொருந்தா எண்கள்      : 2,8,4,1

அதிர்ஷ்ட வர்ணங்கள்   :மஞ்சள், வெளிர்நீலம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right