21.04.2017 ஏவிளம்பி வருடம் சித்திரை மாதம் 8 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

2017-04-21 09:23:04

கிருஷ்ணபட்ச தசமி திதி பின்னிரவு 1.12 வரை. அதன் மேல் ஏகாதசி திதி. அவிட்டம் நட்சத்திரம் முன்னிரவு 1.03 வரை. பின்னர் சதயம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை தசமி. சித்த யோகம் மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் புனர்பூசம், பூசம். சுபநேரங்கள்: காலை 9.30 – 10.30, மாலை 4.30 – 5.30, ராகுகாலம் 10.30 – 12.00,  எமகண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30 – 9.00, வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்) பாவேந்தர் பாரதிதாசன் நினைவுநாள். சுபமுகூர்த்த நாள். நாளை சித்திரை சதயம் திருநாவுகரசர் நாயனார் குருபூஜை.

மேடம்: கோபம், அவமானம்

இடபம்: லாபம், லஷ்மீகரம்

மிதுனம்: செலவு, நஷ்டம்

கடகம்: வெற்றி, அதிர்ஷ்டம்

சிம்மம்: கவனம், எச்சரிக்கை 

கன்னி: நன்மை, அதிர்ஷ்டம்

துலாம்: ஆரோக்கியம், நலம்

விருச்சிகம்: சுகம், இன்பம்

தனுசு: பொறுமை, தெளிவு

மகரம்: அன்பு, பாசம்

கும்பம்: புகழ், பெருமை

மீனம்: ஆக்கம், நிறைவு

எம்பெருமானார் இராமானுஜர் திருவரங்கத்தில் ஜீயராக நியமிக்கப்பட்டு இருந்த காலத்தில் ஆலயத்தில் பூசைகள், வழிபாட்டு விரதங்கள், கிரியைகளை ஒழுங்குபடுத்தினார். திருப்பாவடை சேவை, அன்னக் கூட்டம் முதலிய சேவைகளை ஒழுங்குப்படுத்தினர். அன்னக் கூட்டம் என்பது வித விதமான சாதங்களை சமைத்து பாயில் துணிவிரித்து தயிர் சாதம், பச்சரிசி சாதம், புளியோதரை முதலியானவும் வடை, பலகாரங்கள் வைத்து அதில் சாம்பாரை ஊற்றி வாழை இலையால் மூடி இறைவனுக்கு கண்டருளச் செய்து தீபம் காட்டி அடியவர்களுக்கு பரிமாறுதல். இதைப் பார்த்த திருவரங்கத்து சிறுவர்கள் என்ன செய்தார்கள்? என்பது நாளை தொடரும். 

(“உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி”  – புலமைப்பித்தன்)

குரு, சனி கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிகப்பு, நீலம்

இராமரத்தினம் ஜோதி (தர்மகர்த்தா ஸ்ரீ விஷ்ணு கோயில் தெஹிவளை)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right