18.04.2017 ஏவிளம்பி வருடம் சித்திரை மாதம் 5 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

2017-04-18 09:52:10

கிருஷ்ணபட்ச ஸப்தமி திதி முன்னிரவு 11.55 வரை. அதன் மேல் அஷ்டமி திதி. பூராடம் நட்சத்திரம் முன்னிரவு 7.41 வரை. பின்னர் உத்திராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை ஸப்தமி சித்தயோகம். கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ரோகிணி மிருக சீரிடம் சுபநேரங்கள் முற்பகல் 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30 வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்)

 

மேடம்   : நிறைவு, பூர்த்தி

இடபம்   : சிக்கல், சங்கடம்

மிதுனம்  : அன்பு, ஆதரவு

கடகம்   : தோல்வி, கவலை

சிம்மம்   : சிந்தனை, சங்கடம்

கன்னி    : இலாபம், லக் ஷ்மீகரம்

துலாம்   : செலவு, விரயம்

விருச்சிகம் : சுகம், ஆரோக்கியம்

தனுசு    : வரவு, இலாபம்

மகரம்    : வெற்றி, அதிர்ஷ்டம்

கும்பம்    : நன்மை, அதிர்ஷ்டம்

மீனம்     : அமைதி, சாந்தம்

 

எம் பெருமானார் இராமானுஜர் அருளிய பொன்னுரைகளில் சில “பொன்னையும் பொருளையும் பெரியனவென எண்ணும் சிற்றின்பத்தில் உழலும் ஏதுமிலிகளை நாடாதே. இறைவன் பால் சித்தம் வைத்த பெரியோர்களுடன் பழகு. இன்று இறைவன் கொடுத்த பரிசே உனக்கு இவ்வாழ்க்கை. நாளை எவ்வாறு நீ வாழ்ந்து காட்டப் போகின்றாய் என்பது நீ திரும்பி அவருக்கு கொடுக்கும் பரிசாகும்.” செவ்வாய், புதன் கிரகங்களின் ஆதிக்க நாளான இன்று

அதிர்ஷ்ட எண்கள் : 9, 5

பொருந்தா எண்கள்      : 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம், சிவப்பு

 

இராமரத்தினம் ஜோதி (தர்மகர்த்தா ஸ்ரீ விஷ்ணு கோயில், தெஹிவளை)

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right