ஏக­பத்­தினி விரதன், ஒரே வாக்கு, ஒரே பாணம் என்று வாழ்ந்து காட்­டி­ய ஸ்ரீ இராமன்

2017-04-05 09:23:01

சுக்­கில பட்ச நவமி திதி பிற்­பகல் 1.46 வரை. அதன் மேல் தசமி திதி பூசம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 1. 52 வரை. அதன் மேல் ஆயில்யம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை தசமி சித்­த­யோகம் மேல் நோக்­குநாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் கேட்டை, மூலம் சுப­நே­ரங்கள் காலை 9.00 – 10.00, மாலை, 4.30 – 5.30, ராகு காலம் 12.00 – 1.30, எம­கண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்) முனை­ய­குவார் நாயனார் குரு­பூஜை ஸ்ரீ இராம நவமி.

மேடம்           புகழ், பெருமை

இடபம்           காரி­ய­சித்தி, அனு­கூலம்

மிதுனம்              அமைதி, தெளிவு

கடகம்           போட்டி, ஜெயம்

சிம்மம்           விருத்தி, உயர்வு

கன்னி           வரவு, லாபம்

துலாம்           புகழ், தேர்ச்சி

விருச்­சிகம்      சிக்கல், சங்­கடம்

தனுசு           அன்பு, இரக்கம்

மகரம்            அமைதி, சாந்தம்

கும்பம்            ஜெயம், புகழ்

மீனம் அன்பு, ஆத­ரவு

எமது இந்து மதத்தின் இதி­கா­சங்­களில் மிகவும் சிரேஷ்­ட­மா­னது இராம காவி­ய­மான ஸ்ரீ இரா­மா­யணம், நாம் வாழ்க்­கையை எவ்­வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்­பதை வழி­காட்­டி­யாக வகுத்துக் கொடுத்­தது ஸ்ரீ இராமன் சரிதம், ஏக­பத்­தினி விரதன், ஒரே வாக்கு, ஒரே பாணம் என்று வாழ்ந்து காட்­டி­யவன் ஸ்ரீ இராமன். அவன் சென்ற பாதையில் எவ்­வித தயக்­கமு­மின்றி நாம் நடந்து செல்­லலாம். ஆனால் துவா­ரகைக் கண்ணன் சென்ற பாதையில் நாம் சென்றால் வாழ்க்கை விப­ரீ­த­மா­கி­விடும். கண்ணன் உப­தே­சித்தை மட்­டுமே நாம் கேட்க வேண்டும். 

புதன், சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 5

பொருந்தா எண்கள் : 6, 8, 9

அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள், சாம்பல் நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right