16.01.2016 மன்மத வருடம் தைமாதம் 02ஆம் நாள் சனிக்கிழமை.

Published on 2016-01-16 09:09:56

சுக்கிலபட்ச ஸப்தமி திதி மாலை 7.52 வரை. அதன் மேல் அஷ்டமி திதி. ரேவதி நட்சத்திரம் பின்னிரவு 3.08 வரை. பின்னர் அஸ்வினி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர் பிறை ஸப்தமி மரணயோகம். கரிநாள் (சுப விலக்குக) சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் உத்தரம் சுபநேரங்கள் காலை7.30 –8.30. பகல் 10.30 – 11.30 மாலை 4.45 – 5.45. ராகுகாலம் 9.00 – 10.30 எமகண்டம் 1.30 – 3.00 குளிகை காலம் 6.00 –7.30 வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்)

மேடம் : விருப்பம், பிரியம்

இடபம் : நற்செயல், பாராட்டு

மிதுனம் : துணிவு, திறமை

கடகம் : பகை, விரோதம்

சிம்மம் : செலவு, விரையம்

கன்னி : புகழ், பெருமை

துலாம் : ஆதாயம், லாபம்

விருச்சிகம் : நஷ்டம், கவலை

தனுசு : துணிவு, சித்தி

மகரம் : புகழ், பெருமை

கும்பம் : பொறுமை, நிதானம்

மீனம் : கவலை, பிரிவு

இன்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு அதிகாலை ஸ்ரீவெங்கடேஸ்வர மகாவிஷ்ணு தேவஸ்தானத்தில் மாட்டுப் பொங்கல், கோபூஜை, பசு, மாடுகளை ஆராதித்தல். திருவள்ளுவர் தினம் கலிக்கம்ப நாயனார் குருபூஜை. மேலும் பண்டிகை, கொண்டாட்டங்கள் வீர விளையாட்டுக்கள் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் பசுக்கள் மாடுகள் போன்றவற்றை விரட்டுதல், பீதியுறச் செய்தல் தமிழனின் வீரத்திற்கு ஏற்புடையதல்ல. புலி, சிங்கம், யானை, காண்டாமிருகம் போன்ற மிருகங்களை அடக்கி தங்கள் வீரத்தை நிரூபிக்கட்டும். ரேவதி நட்சத்திர தினமான திருவோணத்தில் அவதாரித்த ஸ்ரீரெங்கநாதரை வழிபடல் சிறப்பாகும்.

“சிந்தனையும் செயலும் ஒன்றுபட்டால் மனிதனின் வெற்றிப்படி உயரும்”

கேது, சனிக்கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள் : 1, 2, 5

பொருந்தா எண்கள் : 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிரான நீலம் – மஞ்சள்