இன்று உங்கள் ராசி சொல்லும் ரகசியம்.?

2017-03-15 10:46:03

15.03.2017 துர்­முகி வருடம் பங்­குனி மாதம் 2 ஆம் நாள் புதன்­கி­ழமை. 

கிருஷ்­ண­பட்ச திரி­தியை திதி முன்­னி­ரவு 11.35 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி சித்­ திரை நட்­சத்­திரம் முன்னிரவு 10.24 வரை. பின்னர் சுவாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி சூன்யம். சித்­த­யோகம் சம­நோக்கு நாள் சந்திராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூரட்­டாதி, உத்­த­ரட்­டாதி சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 12.00 – 1.30, எம­கண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வார­சூலம் –  வடக்கு (பரி­காரம் –  பகல்) சுப முகூர்த்த நாள்.

மேடம் : ஆதாயம், லாபம்

இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம்         : நன்மை, யோகம்

கடகம் : நிறைவு, பூர்த்தி

சிம்மம் : உயர்வு, மேன்மை

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : புகழ், பெருமை

விருச்­சிகம் : சுகம், ஆரோக்­கியம்

தனுசு : லாபம், லக் ஷ்மீகரம்

மகரம் : விவேகம், வெற்றி

கும்பம் : வரவு, லாபம்

மீனம் : இன்பம், மகிழ்ச்சி

ஸ்ரீ இரா­ம­ானுஜர் ஆயிரம் ஆண்­டுகள் (1017– 2017) தொடர்ச்சி ஹரி ஜனங்கள் தாழ்த்­தப்­பட்­டோ­ருக்கு ஏறக்­கு­றைய ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே ஆலய பிர­வேச உரி­மை­ய­ளித்து அவர்­களைத் “திருக்­கு­லத்தார்" என்று சிறப்­ப­ளித்து சமூ­கத்தில் நமது வைஷ்­ணவ சம்பிரதா­யத்தில் புரட்­சியை ஏற்­ப­டுத்­தி­யவர் ஸ்ரீ இரா­மா­னுஜர் ஒரு­வரே. ஆன்­மீக கருத்­துக்கள் மட்­டு­மின்றி மக்கள் நல­னிலும் அதிகம் நாட்டம் கொண்­டவர் .தமி­ழ­கத்தில் சிறந்து விளங்கும் திரு­வ­ரங்கம் திருக்­கோயில் இன்றும் சிறப்­போடு விளங்­கு­வ­தற்கு இப்­பெ­ரு­மானே கார­ண­மாவார். “யாம் பெற்ற இன்பம் இவ் வைய­கமும் பெறுக" என்ற உதா­ரண குணம் படைத்த மெருங்­சீலர். தொடரும். ஸ்ரீ இரா­மா­னுஜர் திரு­வ­டி­களே சரணம். கோகு­லத்து கண்ணன் தாள்கள் போற்றி.

(“பிணி போக்கும் மருந்­துகள் உழைப்பு, வியர்வை, பசி”)

சுக்­கிரன், சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள் இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right