14.03.2017 துர்­முகி வருடம் உத்­த­ரா­யணம் சிசிர ருது பங்­குனி மீன மாதம் 1 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

2017-03-14 10:40:32

சுபயோகம்

14.03.2017 துர்­முகி வருடம் உத்­த­ரா­யணம் சிசிர ருது பங்­குனி மீன மாதம் 1 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை. 

கிருஷ்­ண­பட்ச துவி­தியை திதி முன்­னி­ரவு 10.12 வரை. அதன் மேல் திரி­தியை திதி. அஸ்தம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 8.31 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி சூன்யம். சித்­த­யோகம் சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சதயம், பூரட்­டாதி சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 3.00 – 4.30, எம­கண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30, வார சூலம் –  வடக்கு (பரி­காரம் – பால்) ஷட­சீதி புண்­ய­காலம் கார­டலான்  நோன்பு காமாட்சி அம்­மனை வழிடல் நன்று.

மேடம் : வெற்றி, யோகம்

இடபம் : தனம், சம்­பத்து

மிதுனம் : உயர்வு, மேன்மை

கடகம் : நலம், ஆரோக்­கியம்

சிம்மம் : ஓய்வு, அசதி

கன்னி : நன்மை, அதிர்ஷ்டம் 

துலாம் : கவனம், எச்­ச­ரிக்கை

விருச்­சிகம் : இன்பம், மகிழ்ச்சி

தனுசு : மறதி, விரயம்

மகரம் : போட்டி, செல்­வாக்கு

கும்பம் : நிறைவு, பூர்த்தி

மீனம் : அமைதி, சாந்தம்

ஸ்ரீ இரா­மா­னுஜர் ஆயிரம் ஆண்டு தொன்மை வாய்ந்த நம் இந்து தர்­மத்தை சார்ந்த மக்­க­ளி­டையே மதப்­பற்று தளர்­வுறும் போதும், சமய அறிவு மங்கும் போதும் வாழ்க்கை நெறி பிறழும் போதும் பல மகான்கள் இவ்­வு­லகில் தோன்றி நம் மதத்தின் உண்மைத் தத்­து­வங்­களை உல­கிற்கு உணர்த்தி நம்மை விழிப்பு நிலைக்கு கொண்டு வந்­தது காலம் கால­மாக நடந்து வரும் உண்­மை­யாகும். உல­க­ளவில் நம் மதத்தில் தோன்­றிய பர­மாச்­சா­ரி­யார்கள் என்று போற்­றப்­ப­டு­ப­வர்­களில் சைவ சம­யத்­திற்கு ஆதிசங்­க­ரரும் ஸ்ரீ வைஷ்­ணவ சம­யத்­திற்கு இரா­மா­னு­ஜரும் சிறப்­பா­ன­வர்கள். இளை­யாழ்வார், இரா­மா­னுஜ முனி யதி­ராஜா, உடை­யவர், எம் பெரு­மானார், பர­மாச்­சா­ரியார், பாஷ்­ய­காரர் போன்ற திரு­நா­மங்­களால் போற்றிப் புக­ழப்­பட்டு 120 ஆண்­டுகள் வரை வாழ்ந்து பெரும் சாதனை படைத்­தவர் இரா­மா­னுஜர் ஆவார். – தொடரும்.

புதன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

பொருந்தா எண்கள்: 2, 8, 1

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: சாம்பல், சிகப்பு, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right