08.03.2017 துர்முகி வருடம் மாசி மாதம் 24 ஆம் நாள் புதன்கிழமை

2017-03-08 08:29:33

சுக்கிலபட்ச ஏகாதசி திதி பின்னிரவு 12.01 வரை. அதன் மேல் துவாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் மாலை 6.55 வரை. பின்னர் பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஏகாதசி சித்தயோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் கேட்டை, மூலம் சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30,  மாலை 4.30 – 5.30, ராகு காலம் 12.00 – 1.30, எமகண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்) ஸர்வ ஏகாதாசி  விரதம் ஸ்ரீமன் நாராயணனை வழிபடல் நன்று.

மேடம்: அமைதி, தெளிவு

இடபம்: நன்மை, யோகம்

மிதுனம்: செலவு, விரயம்

கடகம்: தனம், சம்பத்து

சிம்மம்: வரவு, லாபம்

கன்னி: லாபம், லக் ஷ்மீகரம்

துலாம்: அச்சம், பகை

விருச்சிகம்: காரியசித்தி, அனுகூலம் 

தனுசு: அன்பு, பாசம்

மகரம்: பகை, விரோதம்

கும்பம்: நன்மை, அதிர்ஷ்டம்

மீனம்: சுபம், மங்கலம்

இன்று மாசி புனர்பூசம். குலசேகர ஆழ்வார் அவதார தினம்.  அவர் அருளிய பிரபந்தங்கள் பெருமான் திருமொழி பாசுரம் “வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மளாத காதல் நோயாளன் போல் மீளாத் துயர் தரினும் வித்துவ கோட்டம்மா நீ ஆளா உனது அருளே பார்பன் அடியனே! மருத்துவன் நோயாளியை கத்தியால் அறுக்கின்றான். நோயாளி அந்த மருத்துவனை விரும்புகின்றான். அதுபோல் துவாரகை கண்ணனே! நீ எனக்கு மீளாத் துயரினைத் தந்தாலும் அது என் நலன் கருதியே செய்கின்றாய். என்று உன்னருளையே எதிர்பார்க்கின்றேன் ஆழ்வார் திருவடிகளே சரணம்.

(“தெரியாமல் செய்த பிழைக்கு அனுதாபம் காட்டு ஏளனம் செய்யாதே)

சனி, குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள் :மஞ்சள், ஊதா

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right