15.01.2016 மன்மத வருடம் உத்தராயணம் ஹேமந்தருது தை (மகர மாதம்) முதலாம் நாள் வெள்ளிக்கிழமை

Published on 2016-01-15 09:55:44

15.01.2016 மன்மத வருடம் உத்தராயணம் ஹேமந்தருது தை (மகர மாதம்) முதலாம் நாள் வெள்ளிக்கிழமை சுக்கிலபட்ச சஷ்டி இரவு 10.11 வரை. அதன்மேல் ஸப்தமி திதி. உத்தரட்டாதி நட்சத்திரம் பின்னிரவு 4.47வரை. பின்னர் ரேவதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சஷ்டி சித்தாமிர்த யோகம். மேல் நோக்குநாள் சந்திராஷ்ட நட்சத்திரம் பூரம். சுபநேரங்கள் காலை 9.30 – 10.30 மாலை 4.30 – 5.30. ராகுகாலம் 10.30 – 12.00. எமகண்டம் 3.00 – 4.30. குளிகை காலம் 7.30 –9.00. வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்) 

சந்  தினசரி கிரகநிலை

மேடம் : அமைதி, பொறுமை

இடபம் : சாந்தம், அன்பு

மிதுனம் : இலாபம், லக் ஷ்மீகரம்

கடகம் : செலவு, விரயம்

சிம்மம் : சுபம், மங்­களம்

கன்னி : சினம், பகை

துலாம் : உயர்வு, மேன்மை

விருச்­சிகம் : பாசம், அன்பு

தனுசு : வரவு, இலாபம்

மகரம் : பகை, எதிர்ப்பு

கும்பம் : தடங்கல், இடை­யூறு

மீனம் : புகழ், பெருமை

இன்று தைப்­பொங்கல் பண்­டிகை. உழவர் திருநாள். "உழ­வுக்கும் தொழி­லுக்கும் வந்­தனை செய்வோம்" "உழு­துண்டு வாழ்­வாரே வாழ்வர்" "உழு­துண்டு வாழ்­வ­தற்­கொப்­பில்லை கண்டீர்" போன்ற வாச­கங்­களின் மூலம் உழவர் தம் பெருமை புல­னா­கின்­றது. கதி­ர­வனின் ஒளியும் நெற்­க­திர்­களின் பலனும் பசுக்கள் மாடு­களின் சேவையும் எங்கும் எப்­போதும் எல்­லோ­ருக்கும் தேவை. என்­ப­தையே பொங்கல் பண்­டிகை நமக்கு உணர்த்­து­கின்­றது. இப்­பொங்கல் திரு­நாளில் சூரிய பக­வானை ஆரா­தித்து உழவு வாழ, உழவர் வாழ உலகம் வாழ, நாடு­வாழ, மக்கள் வாழ என "துவா­ரஹா" நிலைய வாச­னான கண்ணணை பிரார்த்­திக்­கின்றேன். அனை­வ­ருக்கும் எனது இனிய மகர சங்­கி­ராந்தி தைப்­பொங்கல் வாழ்த்­துக்கள். சுக்­கிரன், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6,2

பொருந்தா எண்கள்: 3,7,8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: அடர்பச்சை, வெளிர் பச்சை, நீலம், சிவப்பு.