22.02.2017 துர்முகி வருடம் மாசி மாதம் 10 ஆம் நாள் புதன்கிழமை

2017-02-22 11:33:57

கிருஷ்ணபட்ச ஏகாதசி  திதி முன்னிரவு 8.16 வரை. அதன் மேல் துவாதசி திதி.  பூராடம் நட்சத்திரம் மாலை 5.01 வரை. பின்னர் உத்தராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை. ஏகாதசி அமிர்த யோகம். கீழ் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் மிருகசீடம். சுபநேரங்கள் காலை 9.30– 10.30,  மாலை 4.30 – 5.30, ராகு காலம் 12.00– 1.30 எமகண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00,  வாரசூலம்– வடக்கு (பரிகாரம் -– பால்) காரிய நாயனன் குருபூஜை ஸ்ர்வ ஏகாதசி விரதம்.

மேடம்: லாபம், லஷ்மீகரம்

இடபம்: நிறைவு, பூர்த்தி

மிதுனம்: அமைதி, தெளிவு

கடகம்: போட்டி, ஜெயம் 

சிம்மம்: நன்மை, யோகம்

கன்னி: வெற்றி, அதிர்ஷடம்

துலாம்: புகழ், பெருமை

விருச்சிகம்: சினம், பகை

தனுசு: தடை, தாமதம்

மகரம்: அமைதி, சாந்தம்

கும்பம்: உயர்வு, மேன்மை

மீனம்: ஊக்கம், உயர்வு

இன்று மாசிமாதம் கிருஷ்ணபட்ச ஏகாதசி விரதம். இதற்கு ஷட்திலா ஏகாதசி, துவாரகா ஏகாதசி என்று பெயர். இன்று உபவாசமிருந்து "துவாரகா" வாசனான கண்ணனை வழிபடுவதால் ஸ்ரீ வைகுண்ட பிராப்தி ஏற்படும். பாவங்கள் விலகும். 

(“கொடுத்ததை மறப்பதும், பெற்றதை நினைப்பதுமே உயர்ந்த நட்புக்கு அழகு”)

ராகு, கேது  கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் 2, 1, 5, 6

பொருந்தா எண்கள்: 7, 4, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பச்சை, இலேசான நீலம்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right