20.02.2017 துர்முகி வருடம் மாசி மாதம் 8 ஆம் நாள் திங்கட்கிழமை

2017-02-20 09:55:08

கிருஷ்ணபட்ச நவமி திதி மாலை 4.51 வரை. அதன் மேல் தசமி திதி கேட்டை நட்சத்திரம் பின்னிரவு 1.06 வரை. பின்னர் மூலம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை நவமி. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பரணி, கார்த்திகை. சுபநேரங்கள் காலை 9.30– 10.30,  மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00 எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00,  வாரசூலம்– கிழக்கு (பரிகாரம்-– தயிர்) ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த நாள்.

மேடம்: புகழ், பெருமை

இடபம்: வெற்றி, ஜெயம்

மிதுனம்: உழைப்பு, உயர்வு

கடகம்: முயற்சி, முன்னேற்றம் 

சிம்மம்: லாபம், லக்ஷ்மீகரம்

கன்னி: நிறைவு, பூர்த்தி

துலாம்: பாராட்டு, புகழ்

விருச்சிகம்: நன்மை, யோகம்

தனுசு: அன்பு, இரக்கம்

மகரம்: சினம், பகை

கும்பம்: புகழ், பெருமை

மீனம்: வெற்றி, அதிர்ஷ்டம்

இன்று கேட்டை நட்சத்திரம், எம் பெருமான் ஸ்ரீமன் நாராயணன் வராஹ அவதாரமெடுத்தது இந் நட்சத்திரத்தில். இப்பூமண்டலம் முழுவதையும் “ஸ்வேத வராஹ கல்பம் என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன. இப்பூமியை நீரில் இருந்து வெள்ளைப் பன்றி உருவெடுத்து மீட்ட  ஸ்ரீ வராஹப் பெருமானை இன்று வழிபடுதல் நன்று. இன்று வராஹ கவசம் பாராயணம். சகல சம்பத்துக்களையும் தரும்.

(“ஒரு பெண்ணின் அழகிய தோற்றமல்ல, பெண்ணிடம் உள்ள கள்ளம் கபடமற்ற இதயமே என் காதலைப் பெறும்” –ஷேக்ஸ்பியர்)

சந்திரன், புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று,

அதிர்ஷ்ட எண்கள் 1, 5, 7

பொருந்தா எண்கள்: 9, 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: இலேசான பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right