18.02.2017 துர்முகி வருடம் மாசி மாதம் 06 ஆம் நாள் சனிக்கிழமை

2017-02-18 10:27:05

கிருஷ்ணபட்ச ஸப்தமி திதி பகல் 12. 49 வரை. அதன் மேல் அஷ்டமி திதி விஷாகம்  நட்சத்திரம் முன்னிரவு 8.04 வரை. பின்னர் அனுஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை அஷ்டமி. சித்தயோகம்.  கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ரேவதி, அஷ்வினி. சுபநேரங்கள் காலை 7.30 – 8.30, 10.30 –  11.30  மாலை 4.30 – 5.30, ராகு காலம் 9.00 – 10.30, எமகண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 7.30, வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்) விஷ்ணுவாலய வழிபாடு சனிவழிபாடு இணையன நன்று. 

மேடம்: நன்மை, யோகம்

இடபம்: புகழ், சாதனை

மிதுனம்: நிறைவு, மகிழ்ச்சி

கடகம்: பேராசை, நஷ்டம்

சிம்மம்: புகழ், பாராட்டு

கன்னி: மகிழ்ச்சி, சந்தோஷம் 

துலாம்:  ஊக்கம், உயர்வு

விருச்சிகம்: புகழ், பெருமை

தனுசு: நம்பிக்கை, காரியசித்தி

மகரம்: நட்பு, உதவி

கும்பம்: அன்பு, பாசம்

மீனம்: அமைதி, சாந்தம். 

இன்று விசாகம் நட்சத்திரம் இந்திரனும் தேவ புரோகிதன் அக்னியும் இந் நட்சத்திர தேவதைகளாவர். மேலும் அதிக பிரபந்தங்களை பாடிய நம்மாழ்வார் அவதரித்தது இந் நட்சத்திரத்தில். இன்று அக்னியைப் பிறப்பிடமாக கொண்ட முருகப் பெருமானை வழிபடல் நன்று. "செந்தில் மாமலையுறும் செங்கல்வராயர்" என்று போற்றப்படும் திருச்செந்தூர் முருகன் வழிபடுதல் நன்று. 

("முட்டாள்களின் நடுவில் ஒரு புத்திசாலி இருப்பது மூடர்களின் மத்தியில் ஓர் அழகி இருப்பது போல" –லாயி)

செவ்வாய், குரு  கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 5, 3, 9

பொருந்தா எண்கள்: 2, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சிவப்பு

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right