15.02.2017 துர்முகி வருடம் மாசி மாதம் 03 ஆம் நாள் புதன்கிழமை

2017-02-15 15:39:02

கிருஷ்ணபட்ச சதுர்த்திதிதி காலை 7.38 வரை. அதன் மேல் பஞ்சமி திதி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 1.15 வரை. பின்னர் சித்திரை நட்சத்திம். சிரார்த்த திதி. தேய்பிறை பஞ்சமி. மரண யோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சதயம், பூரட்டாதி. சுபநேரங்கள் பகல் 10.30– 11.30 , மாலை 4.30– 5.30, ராகுகாலம் 12.00– 1.30,   எமகண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வாரசூலம்–  வடக்கு (பரிகாரம்–  பால்) பூமியெங்கும்  சுபீட்ச மழை.

மேடம்: அன்பு, பாசம்

இடபம்: நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம்: நற்செயல், பாராட்டு

கடகம்: லாபம், ஆதாயம்

சிம்மம்: சுகம், ஆரோக்கியம்

கன்னி: புகழ், பெருமை

துலாம்: அமைதி, தெளிவு

விருச்சிகம்: நலம், ஆரோக்கியம்

தனுசு: நட்பு, உதவி

மகரம்: வெற்றி, யோகம்

கும்பம்: அன்பு, பாசம்

மீனம்: லாபம், லக்ஷ்மீகரம்

இன்று  அஸ்தம் நட்சத்திரம். ஸவிதா என்னும் பெயருடைய சூரிய பகவான் இந் நட்சத்திர தேவதையாவார். மகாபாரத காலத்தில் நகுலனும் சகாதேவனும் இந்நட்சத்திரத்தில் அவதரித்தார்கள். இன்று சூரிய பகவானையும் காயத்திரி தேவியையும் வழிபடுதல் சிறப்பானது.

(“நம் பழைய செருப்பைத் தைப்பதற்கு தொழில் பழகிய தொழிலாளியிடம் கொடுக்கின்றோம். ஆனால் ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை பசப்பி பேசி ஓட்டைப் பறிக்கும் வாயாடியிடம் கொடுக்கிறோம்” –பிளேட்டோ)

சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

பொருந்தா எண்கள்: 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், சிவப்பு

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right