27.01.2017 துர்முகி வருடம் தைமாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை

2017-01-27 09:11:30

அமாவாஸ்யை திதி நாள் முழுவதும். உத்திராடம் நட்சத்திரம் முன்னிரவு 11.03 வரை. பின்னர் திருவோணம் நட்சத்திரம். சிரார்த்த திதி அமாவாஸ்யை சித்தயோகம். மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள். மிருகசிரிஷம் திருவாதிரை. சுபநேரங்கள் காலை 9.30 – 10.30. மாலை 4.30 – 5.30, ராகு காலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00. வாரசூலம் – மேற்கு. (பரிகாரம் –வெல்லம்) தைமாத ஸர்வ அமாவாஸ்யை.

மேடம்: உண்மை, உறுதி 

இடபம்: தனம், சம்பத்து 

மிதுனம்: கவனம், எச்சரிக்கை 

கடகம்: பரிவு, பாசம் 

சிம்மம்: உதவி, நட்பு 

கன்னி: திறமை, முன்னேற்றம் 

துலாம்: தோல்வி, கவலை 

விருச்சிகம்: புகழ், பெருமை 

தனுசு: மகிழ்ச்சி, சந்தோஷம் 

மகரம்: அமைதி, தெளிவு 

கும்பம்: பொறுமை, நிதானம்

மீனம்: சோதனை, சங்கடம் 

இன்று தைமாதம ஸர்வ அமாவாஸ்யை பிதிர் தர்ப்பணம் செய்தல் நன்று. உத்திராடம், திருவோணம் நட்சத்திரங்கள் விநாயகப் பெருமானையும் மகா விஷ்ணுவையும் வழிபடல் நன்று.

(“நாம் வாழும் வாழ்க்கை என்பது உட்கார்ந்து ஊஞ்சலாடுவது அன்று. புயலுக்கு நடுவே படகை செலுத்துவது போன்றது” – காண்டேகர்)

 

செவ்வாய், சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3– 5 – 6

பொருந்தா எண்கள்: 2 – 9 – 8  

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right