12.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 27ம் நாள் செவ்வாய்க் கிழமை

2016-01-12 08:58:24

சுக்கிலபட்ச திரிதியை திதி பின்னிரவு 4.30 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. திருவோணம் நட்சத்திரம் பகல் 10.10 வரை. பின்னர் அவிட்டம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை திரிதியை சித்த யோகம் மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் பூசம். சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள். சுபநேரங்கள் காலை 7.30 –8.30 பகல் 10.30 – 11.30. மாலை 4.30 – 5.30 ராகுகாலம் 3.00 – 4.30 எமகண்டம் 9.00 – 10.30 குளிகைகாலம் 12.00 –1.30 வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்)

மேடம் : நன்மை, அதிர்ஷ்டம்

இடபம் : காரியசித்தி, அனுகூலம்

மிதுனம் : பொறுமை, அமைதி

கடகம் : போட்டி, ஜெயம்

சிம்மம் : விருத்தி, மேன்மை

கன்னி : வரவு, லாபம்

துலாம் : தேர்ச்சி, புகழ்

விருச்சிகம் :     சிக்கல், கவலை

தனுசு : அன்பு, இரக்கம்

மகரம் : அமைதி, சாந்தம்

கும்பம் : ஜெயம், புகழ்

மீனம் : ஆதாயம், லாபம்

சகல விஷ்ணு ஆலயங்களிலும் கூடார வல்லி உற்சவம். சிரவண விரதம் மார்கழி உற்சவம் திருப்பாவை 27ம் பாசுரம். “கூடாரை வெல்லுஞ் சீர் கோவிந்தா! கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்” உரை – எதிரிகளை வெல்லும் சிறப்புடைய கோவிந்தா! உன்னை போற்றி நோன்பு நோற்று உனக்கான கைங்கர்யங்களைச் செய்து எங்களுக்கு கிடைக்கும் உயர்ந்த சன்மானங்களை பார்த்து நாடே புகழப் போகின்றது. காப்பு தோள்வளையும் தோடும் செவிப்பூவும் காலுக்கு பாடகமும் நாங்கள் இனி அணிந்து கொள்வோம். நீ உடுத்து களைந்த பட்டாடைகளை உடுப்போம். அதன் பிறகு சர்க்கரைப் பொங்கலை அதில் உறைந்திருக்கும் நெய் விரலிடுக்கு வழியே முழங்கை வரை வழியப் பெருக்கக்கூடி இருந்து உண்போம். இதுவே எங்களுக்கு குளிர்ச்சியைத் தரவல்லது (ஆண்டாள் திருவடிகளே சரணம்)

குரு, ராகு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள் – இளஞ்சிவப்பு

இராமரத்தினம்ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right