09.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 25ஆம் நாள் திங்கட்கிழமை

2017-01-09 09:44:37

சுக்கிலபட்ச துவாதசி திதி இரவு 12.13 வரை. அதன் மேல் திரயோதசி திதி. கார்த்திகை நட்சத்திரம் காலை 8.21 வரை. பின்னர் ரோகினி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை. துவாதசி. மரணயோகம் காலை 8.21 வரை. அதன் மேல் அமிர்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் சுவாதி. சுபநேரங்கள் காலை 6.30 – 07.30, மாலை 4.30– 5.30, ராகுகாலம் 07.30 – 09.00, எமகண்டம் 10.30 – 12.00, குளிகைகாலம் 01.30– 3.00. வார சூலம் – கிழக்கு. (பரிகாரம் –தயிர்). திருமலை– திருப்பதி நவமி மகாதீர்த்தம். தெகிவளை நெடுமால் ஸ்ரீ வெங்கடேஷ்வர மகாவிஷ்ணு மூர்த்தி தேவஸ்தானம் துவாதசி உற்சவம் தீர்த்த வாரி உற்சவம்.

மேடம்: நன்மை, யோகம் 

ரிஷபம்: அமைதி, சாந்தம் 

மிதுனம்: புகழ், பெருமை 

கடகம்:  புகழ், பாராட்டு 

சிம்மம்: தனம், சம்பத்து

கன்னி: பக்தி, ஆசி

துலாம்: லாபம், லஷ்மீகரம் 

விருச்சிகம்: ஆக்கம், திறமை

தனுசு: உற்சாகம், வரவேற்பு

மகரம்: ஜெயம், புகழ் 

கும்பம்: ஏமாற்றம், கவலை 

மீனம்: வரவு , லாபம்

மார்கழி நோன்பு. திருப்பாவை 25ம் பாசுரம். “ஒருத்திமகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர. திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்தேலோ ரெம்பாவாய்”

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

 

(“முட்டாள் என்பவன் யார் தெரியுமா? தன் வியாதிக்காக மருத்துவரிடம் போய் தன் சொத்துக்களுக்கு அவரையே வாரிசாக்குகிறானே அவன்தான் ” –பெஞ்சமின் ப்ராங்க்லீன்)

செவ்வாய், சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 6

பொருந்தா எண்கள்: 2, 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள், 

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right