06.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 22 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

2017-01-06 09:11:22

சுக்கிலபட்ச அஷ்டமி திதி காலை 09.15 வரை. அதன்மேல் நவமி திதி. ரேவதி நட்சத்திரம் பிற்பகல் 1.04 வரை. பின்னர் அஷ்வினி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை நவமி. அமிர்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்:  உத்திரம், அஸ்தம் சுபநேரங்கள்: காலை 09.30 – 10.30, மாலை 04.30 – 05.30, ராகுகாலம் 10.30 – 12.00, எமகண்டம் 3.00 – 04.30, குளிகை காலம் 07.30– 09.00. வாரசூலம் – மேற்கு (பரிகாரம் –வெல்லம்)

மேடம்: திறமை, முன்னேற்றம் 

இடபம்: உதவி, நட்பு

மிதுனம்: பிரயாணம், அலைச்சல் 

கடகம்: குழப்பம், சஞ்சலம்

சிம்மம்: ஜெயம், வெற்றி

கன்னி: பணம், பரிசு

துலாம்: புகழ், பெருமை

விருச்சிகம்: லாபம், லஷ்மிகரம் 

தனுசு: பாசம், பரிவு

மகரம்: வெற்றி, அதிஷ்டம்

கும்பம்: சினம், பகை 

மீனம்: பாசம், அன்பு

இன்று வாயிலார் நாயனார் குருபூஜை. துர்க்காஷ்டமி. மார்கழி நோன்பு. சகல விஷ்ணுவாலயங்களிலும் அதிகாலை திருப்பள்ளியெழுச்சிப் பூஜை. திருப்பாவை ஓதுதல் வைபவம். சிவாலயங்களில் அதிகாலை திருவெம்பாவை பாராயணம். சனிக்கிழமை பின்னிரவு ஞாயிறு அதிகாலை தெகிவளை நெடுமால் ஸ்ரீ  வெங்கடேஸ்வர மகாவிஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி  விரத தினத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு எம்பெருமான் பரமபதத்தில் இருந்து எழுந்தருளி அடியவர்களுக்கு சேவை சாதிக்கும் வைபவம்.   

(“துன்பத்தை பொறுப்பதே துன்பத்தை வெல்லுவதாகும்” – காம்பெல்)

சுக்கிரன், சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்: 6 

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர்பச்சை, நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right