04.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 20 ஆம் நாள் புதன்கிழமை

2017-01-04 10:08:34

சுக்கிலபட்ச சஷ்டி திதி பகல் 12.47 வரை. அதன் மேல் ஸப்தமி திதி. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 3.21 வரை. பின்னர் உத்திரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஸப்தமி அமிர்த சித்தயோகம். கீழ் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: மகம், பூரம். சுபநேரங்கள்: காலை 9.30 – 10.30, மாலை 4.30 – 5.30, ராகுகாலம் 12.00 – 1.30, எமகண்டம் 7.30 – 09.00, குளிகை காலம் 10.30– 12.00. வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்). சஷ்டி விரதம்.

மேடம்: நன்மை, அதிர்ஷ்டம் 

இடபம்: வெற்றி, அதிஷ்டம்

மிதுனம்: செலவு, விரயம் 

கடகம்: அமைதி, சாந்தம்

சிம்மம்: பணம், பரிசு

கன்னி: கவனம், எச்சரிக்கை

துலாம்: புகழ், கீர்த்தி

விருச்சிகம்: நஷ்டம், கவலை 

தனுசு: நிறைவு, பூர்த்தி

மகரம்: புகழ், பெருமை

கும்பம்: லாபம், லஷ்மிகரம் 

மீனம்: தெளிவு, அமைதி

இன்று திருப்பாவை நோன்பு பாசுரம் 20 “முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய். உக்கமும் தட்.டொளியும் தந்துன் மாணாளனை இப்போதே என்னை நீராட்கேலோ ரெம்பாவை” (ஆண்டாள் திருவடிகளே சரணம்)  மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய திருவெம்பாவை பாடல் 3 முத்தன்ன வெண்நகையாய் முன் வந்து எதிரெழுந்தேன் அத்தன் ஆனந்தன் அமுத தெனன்றள்ளுறித் சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 

“மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டியதில்லை” ­– திருமூலர்

ராகு, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

பொருந்தா எண்கள்: 8, 3

அதிர்ஷ்ட வர்ணங்கள்: கலப்பு வர்ணங்கள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right