19.12.2016 துர்முகி வருடம் மார்கழி மாதம் 4 ஆம் திங்கட்கிழமை

2016-12-19 14:05:08

கிருஷ்ணபட்ச சஷ்டிதிதி முன்னிரவு 11.21 வரை. அதன் மேல் ஸப்தமி திதி. மகம் நட்சத்திரம் மாலை 6.32 வரை. பின்னர் பூரம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை சஷ்டி. மரணயோகம் கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் திருவோணம், அவிட்டம். சுபநேரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம்  9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வாரசூலம் –கிழக்கு (பரிகாரம்– தயிர்)  சஷ்டி விரதம்.

மேடம்: ஜெயம், வெற்றி

இடபம்: மகிழ்ச்சி, சந்தோசம்

மிதுனம்: சுகம், ஆரோக்கியம்

கடகம்: உயர்வு: மேன்மை

சிம்மம்: நட்பு, உதவி

கன்னி, தனம், சம்பத்து

துலாம்: அமைதி, சாந்தம்

விருச்சிகம்: அன்பு, ஆதரவு

தனுசு: வெற்றி, யோகம்

மகரம்: சுபம், மங்களம்

கும்பம்: திறமை, முன்னேற்றம்

மீனம்: முயற்சி, முன்னேற்றம்

திருப்பாவை பாசுரம் 4, ஆழி மழைக் கண்ணா, மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். பொருள்– சமுத்திர ராஜனே! நீ கடல் நீரை எடுத்து, ஆகாயத்தில் திருமாலின் கரிய மேனியைப் போல் மின்னலை உண்டாக்கு. இராமவதாரத்தில் அம்புமழை பொழிந்தது போல் மழையைக் கொட்ட வேண்டும். இதனால் மார்கழியில் நீராடவும் உலகம் உய்யவும் உதவுகின்றாய். ஆண்டாள் திருவடிகளே சரணம்!

(“தலைசிறந்த அறம் என்பது மற்றவர் பசியை நீக்கு வதாகும்” –  மகா வீரர்)

சூரியன், ராகு  கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சாம்பல் நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right