18.12.2016 துர்முகி வருடம் மார்கழி மாதம் 03 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

2016-12-18 09:10:04

18.12.2016 துர்முகி வருடம் மார்கழி மாதம் 03 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

கிருஷ்ணபட்ச பஞ்சமி திதி முன்னிரவு 11.31 வரை. அதன் மேல் சஷ்டி திதி. ஆயில்யம் நட்சத்திரம் மாலை 6.13 வரை. பின்னர் மகம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை பஞ்சமி சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் உத்த ராடம், பூராடம். சுபநேரங்கள் பகல் 10.45– 11.45 மாலை 3.15– 4.15, ராகு காலம் 4.30 – 6.00, எமகண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வாரசூலம் – மேற்கு (பரி காரம் – வெல்லம்) இன்று சூரிய வழிபாடு. கண்ணூறு கழித்தல் நன்று.

மேடம் : லாபம், ஆதாயம்

இடபம் : சுகம், ஆரோக்கியம் 

மிதுனம்         : வரவு, லாபம்

கடகம் : நட்பு, உதவி

சிம்மம் : புகழ், பாராட்டு

கன்னி : பகை, பயம்

துலாம் : முயற்சி, முன்னேற்றம்

விருச்சிகம் : தெளிவு, சந்தோஷம்

தனுசு : அமைதி, சாந்தம்

மகரம் : பக்தி, ஆசி

கும்பம் : உழைப்பு, உயர்வு

மீனம் : அன்பு, பாசம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை மூன்றாம் பாசுரம். "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நீங்காத செல்வம் நிறைந்தேயோ ரெம்பாவாய்" பொருளுரை: வாமனனாய் ஓங்கி உலகங்களை அளந்த உத்தமனான மகா விஷ்ணுவின் நாமங்களைப் பாடினால் மாதம் தீங்கின்றி மும்மாரி பெய்து நாடே செழிக்கும். நாட்டில் செல்வங்கள் செழிக்கும். பசுக்கள் பண்ணைப்போல் குடம் நிறைய பாலைத்தரும். ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

செவ்வாய், குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 3 – 5 – 9

பொருந்தா எண்கள் : 2, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்  : மஞ்சள், சிவப்பு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right