17.12.2016 துர்முகி வருடம் மார்கழி மாதம் 02 ஆம் நாள் சனிக்கிழமை

2016-12-17 11:53:02

கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதி பின்னிரவு 12.10 வரை. அதன் மேல் பஞ்சமி திதி பூசம் நட்சத்திரம் மாலை 6.21 வரை. பின்னர் ஆயில்யம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சதுர்த்தி. சித்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூராடம், உத்திராடம். சுபநேரங்கள் பகல் 10.45– 11.45, மாலை1.45– 5.45, ராகு காலம் 9.00– 10.30, எமகண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30, வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்) சங்கடஹர சதுர்த்தி விரதம். ஸ்ரீ சனிபகவான் சிறப்பு ஆராதனை நாள். கருட தரிசனம் நன்று.

மேடம்: லாபம்,லக்ஷ்மீகரம்

இடபம்: தனம்,சம்பத்து

மிதுனம்: அசதி, ஓய்வு

கடகம்: பகை, பயம்

சிம்மம்: நன்மை, அதிர்ஷ்டம்

கன்னி: விவேகம், வெற்றி

துலாம்: பக்தி, ஆசி

விருச்சிகம்: வெற்றி, அதிர்ஷ்டம்

தனுசு: வரவு, லாபம்

மகரம்: சினம், அவமானம்

கும்பம்: தெளிவு, அமைதி

மீனம்: உயர்வு, மேன்மை. 

திருப்பாவை நோன்பு. ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை. பாசுரம் இரண்டு. "வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்கு" பொருளுரை: உலகத்து மானிடர்களே! பாலை நோன்பிற்கான கடமைகளை கேளுங்கள். பரந்தாமனை துதியுங்கள். நெய், பால் போன்றவற்றை தவிருங்கள். அதிகாலையில் குளியுங்கள். கண்களுக்கு மையையும் கூந்தலுக்கு மலரையும் விலக்கவும். தீய செயல்களை செய்யாதீர்கள். யாரைப் பற்றியும் கோள் சொல்லாதீர்கள்.  யாசிப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். இவற்றை செய்து நாமும் கடைத்தேறுவோம். (ஆண்டாள் திருவடிகளே சரணம்)

("கவலையற்ற எதிர்காலத்திற்கு கல்வியே நிகழ்காலம்" – தாமஸ் புல்லர்)

சனி, சந்திரன் கிரகங்களின் ஆதிக்க கொண்டட இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5 –7

பொருந்தா எண்கள்: 8, 9

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right