ஸ்ரீ ஆண்டாள் உற்சவம். திருப்பாவை நோன்பு ஆரம்பம்

2016-12-16 08:57:41

16.12.2016 துர்முகி வருடம் மார்கழி மாதம் 01 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.

கிருஷ்ணபட்ச திரிதியை திதி பின்னிரவு 1.15 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. புனர்பூசம் நட்சத்திரம் மாலை 6.55 வரை. பின்னர் பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை திரிதியை. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மூலம், பூராடம். சுபநேரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வாரசூலம் –மேற்கு (பரிகாரம் –வெல்லம்) 

மேடம் : சிக்கல், சங்கடம் 

இடபம் : அன்பு, ஆதரவு  

மிதுனம் : தோல்வி, சங்கடம் 

கடகம் : செலவு, விரயம்

சிம்மம் : ஆதாயம், லாபம் 

கன்னி : சுகம், ஆரோக்கியம் 

துலாம் : விருத்தி, மேன்மை 

விருச்சிகம் : கவனம், எச்சரிக்கை 

தனுசு : ஆக்கம், ஆதாயம் 

மகரம்         : பிரயாணம், அலைச்சல் 

கும்பம் : பாசம், அன்பு 

மீனம் : உயர்வு, மேன்மை. 

இன்று தெஹிவளை ஸ்ரீவெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் அதிகாலை திருப்பள்ளி எழுச்சி பூஜை. தனூர் மாத (மார்கழி மாதப் பிறப்பு) பூஜாரம்பம். ஸ்ரீ ஆண்டாள் உற்சவம். திருப்பாவை நோன்பு ஆரம்பம். பாசுரம் “மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால்” பாரோர் புகழபடித்தேலே ரெம்பா வாய் தொண்டரடி பொடியாழ்வார் அருளிய திருப்பள்ளியெழுச்சி பாசுரம். கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான் அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே!

கேது, சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1 – 2 –5

பொருந்தா எண்கள் : 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பச்சை, வெளிர்நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right