04.12.2016 துர்முகி வருடம் கார்த்திகை மாதம்19ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.
சுக்கிலப்பட்ச பஞ்சமி திதி முன்னிரவு 11.46 வரை . பின்னர் ஷஷ்டி திதி. உத்திராடம் நட்சத்திரம் காலை7.44 வரை. பின்னர் திருவோணம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்ப்பிறை பஞ்சமி. அமிர்த யோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் பூசம். சுபநேரங்கள் காலை7.45 – 8.45, மாலை 3.15 – 4.15, ராகு காலம் 4.30– 6.00, எமகண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30. வார சூலம் – மேற்கு. (பரிகாரம் –வெல்லம்)
மேஷம் : புகழ், பாராட்டு
ரிஷபம் : சிக்கல், சங்கடம்
மிதுனம் : மறதி,விரயம்
கடகம் : போட்டி, ஜெயம்
சிம்மம் : நட்பு, உதவி
கன்னி : லாபம், லக் ஷ்மீகரம்
துலாம் : பகை, விரோதம்
விருச்சிகம் : கோபம், அவமானம்
தனுசு : சோர்வு, அசதி
மகரம் : புகழ், பெருமை
கும்பம் : புகழ், சாதனை
மீனம் : கீர்த்தி, செல்வாக்கு
இன்று வளர்பிறை சுபமுகூர்த்த நாள். திருவோண விரதம். ஸ்ரீ மஹா விஷ்ணு இந்நட்சத்திர தேவதையாவார். திருமாலுக்கு உரிய இந்நட்சத்திரமும் சிவனுக்குரிய திருவாதிரை நட்சத்திரங்களுக்கு மட்டுமே"திரு" என்ற அடைமொழி உண்டு. இன்று மஹா விஷ்ணுவையும் ஸ்ரீ லக் ஷ்மி ஹயக்ரீவரையும் வழிபடல் நன்று.
("இந்த உலகில் நீங்கள் வந்துள்ளதால் உங்கள் முத்திரை ஒன்றை விட்டுச் செல்லுங்கள்" – சுவாமி விவேகானந்தர்)
ராகு, கேது கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று,
அதிர்ஷ்ட எண்கள் : 1, 2, 5, 6
பொருந்தா எண்கள் : 7,4,8
அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள், நீலம்