28.11.2016 துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 13ஆம் நாள் திங்கட்கிழமை

2016-11-28 09:59:02

கிருஷ்ண பட்ச சதுர்தசி  திதி மாலை 4.08 வரை. அதன்மேல் அமாவாஸ்யை திதி. விசாகம் நட்சத்திரம். முன்னிரவு 10.19 வரை. பின்னர் அனுசம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை சதுர்தசி. மரண யோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: அஸ்வினி, பரணி. சுபநேரங்கள்: காலை 9.15 – 10.15, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00. வாரசூலம் – கிழக்கு. (பரிகாரம் –தயிர்). கார்த்திகை இரண்டாம் சோமவாரம். சிவ வழிபாடு சிறப்பு.

மேஷம்: அசதி, வருத்தம்

ரிஷபம்:  அன்பு, பாசம் 

மிதுனம்: தனம், சம்பத்து 

கடகம்:  மறதி, விரயம் 

சிம்மம்: வெற்றி, அதிர்ஷ்டம் 

கன்னி:  தெளிவு, நிம்மதி 

துலாம்: புகழ், சாதனை 

விருச்சிகம்: சிந்தனை, சங்கடம் 

தனுசு: யோகம், அதிர்ஷ்டம் 

மகரம்: அமைதி, நிம்மதி 

கும்பம்: தடை, இடையூறு 

மீனம்: சுகம், ஆரோக்கியம்

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழு கூற்றிருக்கை. பாசுரம்; இடங்கொண்ட நெஞ்சத் திறங் கிடப்பன படங்கொண்ட பாம்பனைப் பள்ளி கொண்டான்  திருப்பாதங்களே" பொருளுரை– காவிரிக்கரையிலுள்ள திருக்குடந்தை ஆராவமுதன் அழகாக விளங்குகிறான். கண் வளரும் திருப்பாதங்கள் என்னுள்ளத்தில் விரும்பிக் குடிகொண்டுள்ளன. (திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்)

("விவாதத்தில் நிச்சயமாக வெற்றி பெற ஒருவழிதான் உண்டு. அது விவாதங்களைத் தவிர்பதுதான்.  "– டேல் கார்னிஜி)

 சூரியன், குரு கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று,

அதிர்ஷ்ட எண்கள்:  5 – 1

பொருந்தா எண்:   8 

அதிர்ஷ்ட வர்ணம்:  மஞ்சள், ஊதா

ராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right