26.11.2016 துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 11ஆம் நாள் சனிக்கிழமை

2016-11-26 08:55:34

கிருஷ்ண பட்ச துவாதசி திதி பகல் 12.05 வரை. அதன்மேல் சித்திரை நட்சத்திரம். மாலை 5.17 வரை. பின்னர் ஸ்வாதி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை திரயோதசி. மரண யோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: உத்திரட்டாதி, ரேவதி. சுபநேரங்கள்: காலை 7.45 – 8.45, பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 09.00– 10.30, எமகண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30. வாரசூலம் – கிழக்கு. (பரிகாரம் –தயிர்). சனி மஹா பிரதோஷம். சிவனை வழிபடல் நன்று. கருட தரிசனம். ஸ்ரீ சனி பகவான் வழிபாடு சிறப்பு.

மேஷம்: புகழ், பெருமை 

ரிஷபம்:  உயர்வு, மேன்மை 

மிதுனம்: சினம், பகை 

கடகம்:  வெற்றி, ஜெயம் 

சிம்மம்: நட்பு, உதவி 

கன்னி: அன்பு, பாசம் 

துலாம்: ஓய்வு, அசதி 

விருச்சிகம்: மறதி, விரயம் 

தனுசு: நன்மை, அதிர்ஷ்டம் 

மகரம்: செலவு, விரயம் 

கும்பம்: வரவு, லாபம் 

மீனம்: உண்மை, உதவி

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழு கூற்றிருக்கை. பாசுரம் முப்புரி தூலொடு மானுரியிலங்கும் மார்பினில் இரு பிறப்பொருமானாகி ஒரு முறை யீரடி மூவுலகளந்தானை. பொருளுரை: மூன்று பிரிகளோடு கூடிய பூணூல், மான் தோல் முடியுடன் திருமார்பில் விளங்க அந்தண பிரம்மச்சாரியாகி நால்வகை நிலத்தில் மூன்றடி நிலம் யாசித்தாய். குள்ள வாமனனாயிருந்தவன் தான் நீர் பெற்றதும் இரண்டே அடியில் ஒரே தடவையில் மூன்று உலகையும் அளந்து கொண்டாய் – ஆழ்வார் திருவடிகளே சரணம்.

("மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மதத்தின் அடிப்படை லட்சியமாகும்"– சுவாமி விவேகானந்தர்)

சனி, சூரியன் கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 1– 5 – 6

பொருந்தா எண்கள்:  7– 8 

அதிர்ஷ்ட வர்ணம்:  மஞ்சள் வர்ணம்

ராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right