19.11.2016 துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 4 ஆம் நாள் சனிக்கிழமை.

2016-11-19 10:48:55

சுபயோகம்

19.11.2016 துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 4 ஆம் நாள் சனிக்கிழமை.

கிருஷ்ணபட்ச பஞ்சமி திதி பகல் 10.05 வரை. அதன் மேல் சஷ்டி திதி புனர்பூசம் நட்சத்திரம் பகல் 10.54 வரை. பின்னர் பூசம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை சஷ்டி சித்தியோகம் சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மூலம், பூராடம் சுபநேரங்கள் காலை 7.45– 8.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 9.00– 10.30,  எமகண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30, வார சூலம் கிழக்கு (பரிகாரம்– தயிர்) சனி  பகவான் சிறப்பு ஆராதனை நாள் கிருஷ்ணபட்ச சஷ்டி விரதம்

மேஷம்: வெற்றி, அதிர்ஷ்டம்

ரிஷபம்: தனம், சம்பத்து

மிதுனம்: ஓய்வு, அசதி

கடகம்: மறதி, நஷ்டம்

சிம்மம்: சினம், பகை

கன்னி உற்சாகம், வரவேற்பு

துலாம்: தெளிவு அமைதி

விருச்சிகம்: வரவு, லாபம்

தனுசு: அன்பு, பாசம்

மகரம்: நன்மை, அதிர்ஷ்டம்

கும்பம்: புகழ், பெருமை

மீனம் லாபம், லக்ஷ்மீகரம்

நம்மாழ்வார் பாசுரம் முதற்பத்து மூன்றாம்திருவாய் மொழி  “பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்க்கு அரிய வித்தகன் மத்துறு கடை வெண்ணெய் உரலிடையாப்புண்டு. எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே!” பொருளுரை பற்றுடைய பக்தர்களுக்கு எளியவன் பற்றற்றவர்களுக்கு அரியவன் திருமகள் விரும்பும் அரியவன். மத்தினால் கடையப்படும் வெண்ணெயை திருடி மார்பில் யசோதையால் உரலில் கட்டப்பட்டு ஏங்கியிருந்த எளிமையை. என்ன வென்று சொல்வேன். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“ஒரு நாட்டின் தலைமை என்பது மகுடமல்ல. அது மக்கள் கையில் உள்ள கடிவாளம் ஆகும்”)

சூரியன் குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: ஏனையவை

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள் ஊதா நிறங்கள்.

20.11.2016 துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

கிருஷ்ணபட்ச சஷ்டி திதி காலை 8.55 வரை. பின்னர் ஸப்தமி திதி. பூசம் நட்சத்திரம் பகல் 10.25 வரை. பின்னர் ஆயில்யம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை. ஸப்தமி சித்த யோகம். மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூராடம், உத்திராடம். சுபநேரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 3.15– 4.15, ராகு காலம் 4.30 – 6.00, எமகண்டம் 12.00– 1.30, குளிகைகாலம் 3.00– 4.30, வாரசூலம்– மேற்கு (பரிகாரம்– வெல்லம்) சுபமுகூர்த்த நாள். 

மேஷம்: தெளிவு, அமைதி 

ரிஷபம்: பொறுமை, நிதானம் 

மிதுனம்: பிரயாணம், அலைச்சல்

கடகம்: ஓய்வு, அசதி 

சிம்மம்: பயம், பகை 

கன்னி: நட்பு, உதவி 

துலாம்: ஈகை, புண்ணியம் 

விருச்சிகம்: லாபம், லக்ஷ்மீகரம் 

தனுசு: ஜெயம், புகழ் 

மகரம்: சுபம், மங்களம் 

கும்பம்: சினம், பகை 

மீனம்: நன்மை, அதிர்ஷ்டம் 

(“நல்லோர் மனதை நடுங்கச் செய்தல் பாவம். வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது பாவம். தானம் கொடுப்போரை தடுப்பது பாவம். மனமொத்த நட்புக்கு வஞ்சகம் இழைப்பது பாவம். ஏழைகள் வயிறு எரியச் செய்தல் பாவம்” – வள்ளலார்.)

சந்திரன், குரு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7,5,6

பொருந்தா எண்கள்: 9 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இலேசான பச்சை.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right