இன்றைய அதிர்ஷ்ட வர்ணங்கள் : நீலம், மஞ்சள்

2016-11-16 08:42:39

16.11.2016 துர்­முகி வருடம் கார்த்­திகை மாதம்  01ஆம் நாள் புதன்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச துவி­தியை திதி மாலை 3.33 வரை. அதன்மேல் திரு­தியை திதி. ரோஹிணி நட்­சத்­திரம் பிற்­பகல் 2.19 வரை. பின்னர் மிரு­க­சி­ரீஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி சூன்யம். சித்த யோகம். கரிநாள். சுபம் விலக்­குக. மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் விசாகம், அனுஷம். சுப­நே­ரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00. வார சூலம் –வடக்கு. (பரி­காரம் –பால்) சப­ரி­மலை ஸ்ரீ ஐயப்பன் பக்­தர்கள் மாலை­ய­ணியும் விழா. கார்த்­திகை மாதப்­பி­றப்பு முடவன் முழுக்கு. விஷ்­ணு­பதி புண்­ய­காலம்.

மேஷம் : வரவு,லாபம் 

ரிஷபம் :  நன்மை, யோகம் 

மிதுனம்     : அமைதி,சாந்தம் 

கடகம் :  குழப்பம்,சஞ்­சலம் 

சிம்மம் : சுகம், ஆரோக்­கியம் 

கன்னி : கோபம், சினம் 

துலாம் : வெற்றி, அதிர்ஷ்டம் 

விருச்­சிகம் : லாபம் , லக்ஷ்­மீ­கரம் 

தனுசு : காரி­ய­சித்தி,அனு­கூலம் 

மகரம் : பொறுமை, அமைதி 

கும்பம் : ஜெயம்,புகழ் 

மீனம் : தேர்ச்சி,அனு­கூலம் 

ஸ்ரீ ஆண்டாள் அரு­ளிய நாச்­சியார்  திரு­மொழி பாசுரம்;   தெள்­ளியார் பலர் கைதொழும் தேவனார் வள்ளல் மாலி­ருஞ்­சோலை மணா­ளனார். பள்ளி கொள்­ளு­மி­டத்து அடி கொட்­டிடக் கொள்­ளு­மாகில் நீ கூடிடு கூடலே. பொரு­ளுரை –  தெளிந்த சிந்தை உடைய ஞானியர் கைதொழும் வாசு­தே­வனே! திரு­மா­லிருஞ் சோலையில் எழுந்­த­ரு­ளி­யுள்ள வள்ளல். அழ­கிய மண­வா­ளனாய் சயனம் கொண்­ட­வனே. நீ நின்ற  இடத்தில் உனது திரு­வ­டி­களைப் பிடிக்கும் பாக்­கி­யத்தை நீ தரு­கையில் கூடவே நீ கூடு­வா­யாக.(ஸ்ரீ ஆண்டாள் திரு­வ­டி­களே சரணம்)

("வணங்க ஆரம்­பிக்கும் போதே மனிதன் வளர  ஆரம்­பிக்­கின்றான்"  – சோல்ரிட்ஜ்)

கேது, செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் : 5 –6 

பொருந்தா எண்கள் : 7– 8 – 2 

அதிர்ஷ்ட வர்ணங்கள் : நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right