15.11.2016 துர்முகி வருடம் ஐப்பசி 30 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

2016-11-15 08:14:14

சுக்கில பட்ச பிரதமை திதி மாலை 5.48 வரை. பின்னர் துவிதியை திதி. கார்த்திகை நட்சத்திரம் மாலை 5.52 வரை. பின்னர் ரோகினி நட்சத்திரம்.  சிரார்த்த திதி. வளர்பிறை பிரதமை. சித்தாமிர்த யோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சுவாதி, விசாகம், சுபநேரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 3.00– 4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வாரசூலம்– வடக்கு (பரிகாரம்– பால்) கார்த்திகை பகுளப் பிரதமை.

மேடம்: தெளிவு, அமைதி

இடபம்: பொறுமை, நிதானம்

மிதுனம்: நலம், ஆரோக்கியம்

கடகம்: லாபம், லக்ஷ்மீகரம்

சிம்மம்: தனம், லாபம்

கன்னி: தெளிவு, நிம்மதி

துலாம்: ஓய்வு, அசதி

விருச்சிகம்: சோதனை, சங்கடம்

தனுசு: வெற்றி, யோகம்

மகரம்: அசதி, வருத்தம்

கும்பம்: புகழ், பெருமை

மீனம்: தடை, இடையூறு 

பொய்கையாழ்வார் அருளிய முதல் திருவந்தாதி பாசுரம் ; முதலாவர் மூவரே அம்மூவருள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன் முதலாய நல்லான் அருளல்லால் நாம நீர்வையகத்து பல்லார் அருளும் பழுது. பொருளுரை– உலகத்தில் பல தெய்வங்கள் வழங்கப்பட்டாலும் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருமே முக்கியமானவர்கள். மும்மூர்த்திகளிலும் காப்பாற்றும் தொழிலை செய்வதால் கடலின் நிறம் கொண்ட திருமாலே தலைவனாகின்றான். ஊழிக்காலத்தில் அவனே நற்குணங்களின் வேர். அவனருள் இல்லாமல் கடல் சூழ்ந்த இப் பூமியில் வேறு எந்த தெய்வத்தின் அருள் கிடைத்தாலும் அது பயனற்றதாகும். (பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்)

(ஒரு பெண் காதலிக்கிறாள். அல்லது வெறுக்கிறாள் நடுத்ததரத்தை அறிவதில்லை  – சைரஸ்) 

சுக்கிரன், சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்: 6

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர் பச்சை, நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right