11.11.2016 துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 26 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

2016-11-11 08:20:15

சுக்கிலபட்ச துவாதசி திதி பின்னிரவு 2.53 வரை. அதன் மேல் திரயோதசி திதி உத்திரட்டாதி நட்சத்திரம். முன்னிரவு 10.03 வரை. பின்னர் ரேவதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை துவாதசி. சித்தாமிர்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூரம், உத்திரம். சுபநேரங்கள் காலை 10.00– 10.30, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகைகாலம் 7.30– 9.00, வாரசூலம்– மேற்கு (பரிகாரம்– வெல்லம்) சுப முகூர்த்த நாள் வைணஷ்வ ஏகாதசி. சாதூர் மாஸ்ய விரத பூர்த்தி. துளசி விவாகம். மகாலட்சுமி உற்பத்தி. 

மேடம்: புகழ், பெருமை 

இடபம்: அமைதி, தெளிவு

மிதுனம்: உழைப்பு, உயர்வு 

கடகம்: நிறைவு, பூர்த்தி 

சிம்மம்: அன்பு, ஆதரவு 

கன்னி: புகழ், பாராட்டு 

துலாம்: கீர்த்தி, செல்வாக்கு 

விருச்சிகம்: நஷ்டம், கவலை 

தனுசு: விருத்தி, அதிர்ஷ்டம் 

மகரம்: நட்பு, உதவி 

கும்பம்: முயற்சி, முன்னேற்றம் 

மீனம்: இன்பம், மகிழ்ச்சி 

நம்மாழ்வார் அருளிய பெரிய திருவந்தாதி பாசுரம் – கல்லும் கணை கடலும் வைகுந்த வானாகும் புல்லென்றொழிந்தன சொல்? ஏ பாவம் வெல்ல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான் ஆடியேன் துள்ளத்தகம். பொருளுரை: திருவேங்கடமலை ஆரவாரிக்கும் திருப்பாழ் கடல் ஸ்ரீவைகுண்டமாகிய பரமபதம் இவை அனைத்தும் எம் பெருமானுக்கு வேண்டாத சிறிய இடங்களாகிவிட்டன. ஐயோ பாவம் மண்ணளக்க உயர்ந்தன், கரிய நிறத்தவன் என்னுள்ளம் புகுந்து நீங்கா குடியிருக்கின்றான். அடியேன் இதற்கு என்ன புண்ணியம் செய்தேன் (நம்மாழ்வார் திருவடிகளே சரணம்)

(“மண்ணாசை கொண்டு மண்ணை ஆண்ட எல்லோரும் மடிந்து மண்ணோடு மண்ணாகி விட்டதை நீ அறிவாய். இருந்தும் நீ ஏன் மண்ணாசை கொண்டு அலைகிறாய்?” – வள்ளலார்)

சந்திரன், குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 7 – 5 –6

பொருந்தா எண்கள்: 9 – 8 

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இலேசான பச்சை

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right