உங்க ராசிக்கு இன்று என்ன நடக்கும் .?

2016-11-09 09:06:11

09.11.2016 துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 24 ஆம் நாள் புதன்கிழமை.

சுக்கிலபட்ச நவமி திதி காலை 7.39 வரை. அதன் மேல் தசமி திதி. சதயம் நட்சத்திரம் பின்னிரவு 12.03 வரை. பின்னர் பூரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை தசமி. சித்தாமிர்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ஆயில்யம், மகம். சுபநேரங்கள் காலை 9.30– 10.30, பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 12.00– 1.30,  எமகண்டம் 7.30– 9.00, குளிகைகாலம் 10.30– 12.00, வாரசூலம்– வடக்கு (பரிகாரம்– பால்) சுபமுகூர்த்த நாள். வீரமாமுனிவர் பிறந்த நாள். 

மேடம் : களிப்பு, மகிழ்ச்சி

இடபம் : தடங்கல், கொண்டாட்டம்

மிதுனம் : நலம், ஆரோக்கியம்

கடகம் : புகழ், பெருமை

சிம்மம் : ஓய்வு, அசதி

கன்னி : உண்மை, உறுதி

துலாம் : பகை, எதிர்ப்பு

விருச்சிகம் : பயம், அச்சம்

தனுசு : ஜெயம், புகழ்

மகரம் : அமைதி, தெளிவு

கும்பம் : ஈகை, புண்ணியம்

மீனம் : நன்மை, அதிர்ஷ்டம்

இன்று ஐப்பசி சதயம் நட்சத்திரம். பேயாழ்வார் திரு நட்சத்திர நாள். அவதரித்தது திருமயிலை. அம்சம் நந்தகம் அருளிய பிரபந்தம் மூன்றாம் திருவந்தாதி. சிவனையும் திருமாலையும் ஒருங்கே கண்டு பாடியவர்.  "பாசுரம் தாழ்சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும் சூளு அரவும் பொன் நாணும் தோன்றுமாய் சூழும் திரண்டு அருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து. பொருளுரை: ஒருபுறம் தாழ்ந்த சடை மறுபுறம் நீண்ட திருமுடி, ஒருகையில் அழகிய மழு. மறுகையில் சக்கரப்படை, சுற்றிய நாகம் ஒருபுறம், மறுபுறம் பொன் அரைஞாண். சிவன் ஒருபுறம், திருமால் மறுபுறம், சங்கரநாராயணனாக நாற்புறம் அருவி பாயும் திருவேங்கடத்தில் வேங்கடவனாக எழுந்தருளி உள்ளான் எம் பெருமான். (பேயாழ்வார் திருவடிகளே சரணம்)

செவ்வாய், சந்திரன் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள் : 3, 5, 6

பொருந்தா எண்கள் : 2, 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்    : நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right