17.11.2016 துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 22 ஆம் நாள் திங்கட்கிழமை

2016-11-07 08:08:13

சுக்கில பட்ச ஸப்தமி திதி காலை 8.47 வரை. அதன் மேல் அஷ்டமி திதி. திருவோணம் நட்சத்திரம் பின்னிரவு 12.33 வரை. பின்னர் அவிட்டம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை அஷ்டமி. அமிர்த சித்த யோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் புனர்பூசம், பூசம். சுபநேரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வாரசூலம்– கிழக்கு (பரிகாரம்– தயிர்) சிரவணவிரதம். பொய்கையாழ்வார் திருநட்சத்திரம். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் நினைவு நாள், வளர்பிறை சுபமுகூர்த்தம் 

மேடம்: சிந்தனை, கலக்கம்

இடபம்: அமைதி, தெளிவு

மிதுனம்: அன்பு, இரக்கம்

கடகம்: உழைப்பு, உயர்வு

சிம்மம்: கோபம்,  அவமானம்

கன்னி: பகை, பயம்

துலாம்: அன்பு, ஆசி

விருச்சிகம்: லாபம், லக்ஷ்மீகரம்

தனுசு: காரியசித்தி, அனுகூலம்

மகரம்: கீர்த்தி, செல்வாக்கு

கும்பம்: மகிழ்ச்சி, சந்தோசம்

மீனம்: பிரிவு, கவலை

திருமழிசையாழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி பாசுரம்: “காப்பு மறந்தறியேன் கண்ணனே என்றிருப்பன் ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கு ஆக்கையும் கொடுத்தளித்த கோனே! குணபரனே உன்னை விடத்துணியார் மெய் தெளிந்தார்தாம். பொருளுரை;  ஊழிக் காலத்தில் அழிந்துபோன எல்லா ஜீவன்களுக்கும் மீண்டும் தேகத்தைக் கொடுத்த என் துவாரகைக் கண்ணனே! குணங்களின் வேரே. உன்னை நான் எப்படி மறந்திருப்பது. உன் சொரூபம் என்னை விட யார் அறிவார்கள்? (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(உழைப்பால் களைப்படைந்தவர்களே உண்மைான இன்பத்தைக்  காண்கின்றார்கள்” –அரிஸ் டாட்டில்)

கேது, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று,

அதிர்ஷ்ட எண்கள், 5– 6

பொருந்தா எண்கள்: 7, 8, 2

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right