03.11.2016 துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் நாள். வியாழக்கிழமை

2016-11-03 10:04:41

சுக்கில பட்ச சதுர்த்தி திதி நாள் முழுவதும். கேட்டை நட்சத்திரம் முன்னிரவு 7.50 வரை. பின்னர் மூலம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தி. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் கார்த்திகை, ரோகிணி. சுபநேரங்கள் பகல் 10.45– 11.45, பிற்பகல் 12.15– 1.15, ராகு காலம் 1.30– 3.00, எமகண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார சூலம்– தெற்கு (பரிகாரம் –தைலம்) சதுர்த்தி விரதம். கந்தசஷ்டி விரதம். மாத சதுர்த்தி நாக சதுர்த்தி.

மேடம்: நன்மை, அதிர்ஷ்டம்

இடபம்: செலவு, விரயம்

மிதுனம்: லாபம், லக்ஷ்மீகரம்

கடகம்: வரவு, லாபம்

சிம்மம்: போட்டி, ஜெயம்

கன்னி: ஆர்வம், திறமை

துலாம்: முயற்சி, முன்னேற்றம்

விருச்சிகம்: மறதி, விரயம்

தனுசு: புகழ், பாராட்டு 

மகரம்: லாபம், லக்ஷமீகரம் 

கும்பம்: கவனம், எச்சரிக்கை

மீனம்: வெற்றி, அதிர்ஷ்டம்

திருமழிசையாழ்வார் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி திய்வ பிரபந்த பாசுரம்; "என்றும் மறந்தறி யேன் என் நெஞ்சத்தே வைத்து  நின்றும் இருந்தும் நெடுமாலை என்றும் திரு இருந்த மார்பன் சீரிதரக் காளாய் கரு இருந்த நாள் முதலாக் காப்பு. பொருளுரை: அடியேன் கர்ப்பவாசம் செய்யும் காலத்திலிருந்தே பரந்தாமனின் பாதுகாப்பைப் பெற்றிருப்பதால் மகா லக்ஷ்மி கொலுவிருக்கும் திருமார்பையுடைய திருமால் என் நெஞ்சிலே வைத்து நிற்றல், இருத்தல் போன்ற எல்லா நிலைகளிலும் மறக்காமல் அவனையே சிந்திக்கின்றேன். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

("எங்கு பெண்கள் கெளரவமாக நடத்தப் படுகிறார்களோ அங்கு எல்லாத்  தேவதைகளும் குடியேறும்" –மனுதர்ம சாஸ்திரம்)

குரு, புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று,

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5,  9, 1

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், லேசான சிவப்பு

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right