28.10.2016 துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 12 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

2016-10-28 07:59:08

கிருஷ்ணபட்ச திரயோதசி முன்னிரவு 7.36 வரை. அதன் மேல் சதுர்த்தசி திதி. அஸ்தம் நட்சத்திரம் நாள் முழுவதும். நட்சத்திர (திரிதியை பிருக்கு) சிரார்த்த திதி. தேய்பிறை. திரயோதசி அமிர்த யோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் பூரட்டாதி. சுபநேரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வாரசூலம் – மேற்கு  (பரிகாரம் – வெல்லம்) கிருஷ்ணபட்ச மஹா பிரதோசம் சகல சிவாலயங்களிலும் ஸ்ரீ நந்தீஸ்வரப் பெருமானை வழிபடல் நன்று சுபமுகூர்த்த நாள். மாத சிவராத்திரி

மேடம்: சிரமம், தடை

இடபம்: கவலை, சங்கடம்

மிதுனம்: அன்பு, பாசம்

கடகம்: மகிழ்ச்சி, சந்தோசம்

சிம்மம்: தனம், லாபம்

கன்னி: ஓய்வு, அசதி

துலாம்: நிறைவு, பூர்த்தி

விருச்சிகம்: உற்சாகம், வரவேற்பு

தனுசு: ஓய்வு, அசதி

மகரம்: உழைப்பு, உயர்வு

கும்பம்: நலம், ஆரோக்கியம்

மீனம்: சிந்தனை, குழப்பம்

பொய்கையாழ்வார் அருளிய முதல் திருவந்தாதி. பாசுரம் “எழுவார் விடை கொள்வார் ஈன்துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர் மனச்சுடரை தூண்டும் மலை “பொருளுரை; திருவெங்கடவனிடம் பிரார்த்திக்கும் ஐஸ்வர்யம் கிடைத்தவுடன் அடியார்கள் எழுந்து விடை பெறுகின்றனர். வேங்கடவனும் மகிழ்ச்சி அடைகின்றான். இது எவ்வாறு என்றால் பசித்த குழந்தைக்கு தாய் பாலூட்டுகின்றாள். பருகிய குழந்தையை விட பாலைக் கொடுத்த தாய் மகிழ்ச்சியடைகின்றாள். வழுவா வகை நினைத்து வைகல் தொழுவார். எதையும் பிரார்த்திக்காது திருவேங்கடனின் திருவருளைப் வேண்டுவோரின் வினைச்சுடரை அணைத்து மனச்சுடரை ஏற்றுவது திருமலை மட்டுமே (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“நீ பாவத்தை வெறுக்கலாம். ஆனால் பாவியை வெறுக்காதே அவனை திருத்தி கைதூக்கி விடு” 

– இராமதீர்த்தர்)

சூரியன், சந்திரன் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா  எண்கள்: ஏனையவை

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right