24.10.2016 துர்­முகி வருடம் ஐப்­பசி மாதம் 08 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

2016-10-24 09:03:25

கிருஷ்­ண­பட்ச நவமி திதி மாலை 5.39 வரை. அதன் மேல் தசமி திதி ஆயி­லியம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 2.37 வரை. பின்னர் மகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை நவமி. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் உத்­தி­ராடம். சுப­நே­ரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 5.00 – 6.00, ராகு காலம் 7.30 – 9.00, எம­கண்டம் 10.30 – 12.00, குளிகை காலம் 1.30 – 3.00, வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்) 

மேடம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

இடபம் : மறதி, விரயம்

மிதுனம்         : அன்பு, ஆசை

கடகம் : அமைதி, நிம்­மதி

சிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கன்னி : தோல்வி, கவலை

துலாம் : அமைதி, தெளிவு

விருச்­சிகம் : சுகம், ஆரோக்­கியம்

தனுசு : பிணி, பீடை

மகரம் : நலம், ஆரோக்­கியம்

கும்பம் : முயற்சி, முன்­னேற்றம்

மீனம் : லாபம், லக் ஷ்மீகரம்

பேயாழ்வார் அரு­ளிய மூன்றாம் திரு­வந்­தாதி பாசுரம். முத­லாழ்­வார்­களில் இருவர் விளக்­கேற்ற, ஏற்­றிய விளக்கில் எம்­பெ­ரு­மானை முதலில் தரி­சித்­தவர் பேயாழ்வார் பாடு­கின்றார். “திருக்­கண்டேன் பொன்­மேனி கண்டேன் திகழும் அருக்கண் அணி நிறமும் கண்டேன். இன்று எம்­பெ­ரு­மானின் கடல் நிறம் கொண்ட மேனியில் முதலில் மார்பில் உள்ள திரு­ம­களைக் கண்டேன். அதன் பின்பு தான் அவன் அழ­கிய திரு­மே­னியைக் கண்டேன். பிர­கா­ச­மான திரு­மே­னியைக் கண்டேன். அழ­கிய சுதர்­ஸ­னத்­தையும் கையில் வலம்­புரி சங்­கையும் கண்டேன்.புள­கித்தேன்”. 

(பேயாழ்வார் திரு­வ­டி­களே சரணம்.)

“குண­முள்ள பெண் ஒருவன் கருத்தில் ஒளி வீசு­கிறாள். புத்­தி­சாலி பெண் ஒருவன் கவ­னத்தை கவர்­கிறாள். அழ­கான பெண் ஒரு­வனின் கலை­யு­ணர்வை மயக்­கு­கிறாள். ஆனால் பரிவும் பாசமும் உள்ள பெண் அவ­னையே ஆட்­கொள்­கிறாள்." – அரிஸ்­டோட்டில்.

சுக்­கிரன், கேது கிர­கங்­களின் ஆதிக்கம் கொண்ட நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 2

பொருந்தா எண்கள்: 3, 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர்பச்சை, நீலம்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right