21.10.2016 துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 5 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

2016-10-21 08:28:25

கிருஷ்ணபட்ச சஷ்டி திதி முன்னிரவு 09.10 வரை. அதன் மேல் ஸப்தமி திதி. திருவாதிரை நட்சத்திரம் பின்னிரவு 3.42 வரை. பின்னர் புனர்பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை சஷ்டி சித்தயோகம். மேல்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் கேட்டை. சுபநேரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்) கிருஷ்ணபட்ச சஷ்டி விரதம். முருகப் பெருமானை வழிபடல் நன்று.

 

மேடம்: உயர்வு, மேன்மை

இடபம்: துயரம், துன்பம்

மிதுனம்: நலம், ஆரோக்கியம்

கடகம்: திறமை, தேர்ச்சி

சிம்மம்: அன்பு, இரக்கம்

கன்னி: பிரயாணம், அலைச்சல்

துலாம்: பொறமை, நஷ்டம்

விருச்சிகம்: லாபம், லக் ஷ்மீகரம்

தனுசு: சினம், பகை

மகரம்: பிரிவு, நினைவு

கும்பம்: வெற்றி, ஜெயம்

மீனம்: நினைவு, துன்பம்

நம்மாழ்வார் அருளிச் செய்த திருவிருத்தம் பாசுரம் “மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக்கொடிகாள் வாயோ அதுவன்றி வல்வினை யேனும் கிளியுமென்கும். ஆயோஅடும் தொண்டையோ அறையோ இதறிவரிதே” பொருளுரை: மாயவனின் திருவேங்கட மலையில் வாழும் பூங்கொடி போன்ற நங்கையரே! எனது காதல் நோய் பற்றி நான் சொல்வதைக் கேட்கலாகாதா? உங்கள் வாயழகு என்னை வருத்துகின்றது. அதுவல்லாமல் கொடிய பாவம் செய்த நானும் என் கிளியும் நீங்காமிழற்றும் “ஆயோ” என்ற கிளிகளை விரட்டும் இனிய சொல்லுக்கு உருகுகின்றோம். உங்கள் வாயோ, சொல்லோ, கோவைக் கனி போன்ற உதடுகளோ மூன்றில் எது என்னை வேதனைப்படுத்துகின்றது என்று தெரியவில்லை. (நம்மாழ்வார் திருவடிகளே சரணம்).

“மனச்சாட்சிகளின் படி நடப்பவன் நீதிமன்றத்தின் தண்டனைக்கு பயப்படுவதில்லை" – தாமஸ் புல்லர். 

 

குரு, ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர்நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right