20.10.2016 துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 4 ஆம் நாள் வியாழக்கிழமை

2016-10-20 08:09:06

கிருஷ்ணபட்ச பஞ்சமி திதி முன்னிரவு 11.03 வரை. அதன் மேல் சஷ்டி திதி ரோகினி நட்சத்திரம் காலை 6.11 வரை. அதன் மேல் மிருகசீரிஷம் நட்சத்திரம்.  பின்னிரவு 4.49 வரை. பின்னர் திருவாதிரை நட்சத்திரம் (நட்சத்திர அவமாகம்) சிரார்த்த திதி தேய்பிறை பஞ்சமி மரண யோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் அனுஷம். சுபநேரங்கள் பகல் 10.30– 11.30, பிற்பகல் 1.00– 1.30, ராகு காலம் 1.30– 3.00, எமகண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வாரசூலம் – தெற்கு (பரிகாரம் –  தைலம்) மிருத்யு சுபம் விலக்குக.

மேடம்: பொறாமை, நஷ்டம்

இடபம்: திறமை, முன்னேற்றம்

மிதுனம்: வரவு, லாபம்

கடகம்: போட்டி, ஜெயம்

சிம்மம்: பக்தி, அனுக்கிரகம்

கன்னி: உயர்வு, மேன்மை

துலாம்: அமைதி, நிம்மதி

விருச்சிகம்: அனுகூலம், காரியசித்தி

தனுசு: புகழ், ஜெயம்

மகரம்: கீர்த்தி, செல்வாக்கு

கும்பம்: உயர்வு, மேன்மை

மீனம்: அன்பு, பாசம்

நம்மாழ்வார் அருளிச் செய்த திருவிருத்தம் பாசுரம் “கயலோ நு ம கண்கள்? என்று களிறு வினவி நிற்றீர் அயலோர் அறியிலும் ஈதென்ன வார்த்தை” பொருளுரை: இந்தப் பக்கமாக ஒரு யானை வந்தது கண்டீர்களா? என்று கேட்டால் அயலார் இது தகாத பேச்சு என்று பரிகாசம் செய்வார்கள். பெண்களே! உங்கள் விழிகளை கயல் மீன்களுக்கு ஒப்பிடுவது இது போன்றது. கடல் நீரை உண்டு மெதுவாக நகரும் காள மேகம் போன்ற நிறம் கொண்ட எம் பெருமானது திருவேங்கட மலை அறிந்தும் திருவோய் கடவனை கண்டீர்களா? என்று கேட்பது இதற்கு ஒப்பானது. ஆழ்வார் திரு அடிகளே சரணம்.

“ஆசை சிறிதளவு உள்ளவன் ஏழையல்ல. ஆசை அதிகம் உள்ளவனே ஏழை" 

சந்திரன் குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 9, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right