19.10.2016 துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 3 ஆம் நாள் புதன்கிழமை

2016-10-19 08:19:25

கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதி பின்னிரவு 1.10 வரை. அதன் மேல் பஞ்சமி திதி. கார்த்திகை நட்சத்திரம்  காலை 7.43 வரை. பின்னர் ரோகினி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சதுர்த்தி. அமிர்த சித்தயோகம். சுபநேரங்கள் காலை 9.15– 10.15 மாலை 4.45– 5.45, ராகுகாலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகைகாலம் 10.30– 12.00, வாரசூலம் –வடக்கு (பரிகாரம் –பால்) சங்கட ஹர சதுர்த்தி விரதம் விநாயகப் பெருமானை வழிபடல் நன்று. கீழ்நோக்கு நாள் சந்திரஷ்டம நட்சத்திரம் விசாகம்.

மேடம்: ஜெயம், புகழ்

இடபம்: தனம், சம்பத்து

மிதுனம்: அன்பு, ஆதரவு

கடகம்: அமைதி, தெளிவு

சிம்மம்: லாபம், லக்ஷ்மீகரம்

கன்னி: சினம், பகை

துலாம்: விரயம், செலவு,

விருச்சிகம்: காரியசித்தி, அனுகூலம்

தனுசு: இன்பம், சுகம்

மகரம்: நன்மை, யோகம்

கும்பம்: அன்பு, இரக்கம்

மீனம்: வெற்றி, அதிர்ஷ்டம்

நம்மாழ்வார் அருளிச் செய்த திருவிருத்தம் பாசுரம் முலையோ முழு முற்றம் போந்தில மொய்பூங்குழல் குறிய கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம் மலையோ திருவேங்கடமென்று கற்கின்ற வாசகமே? பொருளுரை; என் பேதைப் பெண்ணுக்கு இன்னும் ஸ்தனங்கள் பூரணமாக வளரவில்லை. இவளது தலை முடி இன்னும் குட்டையாகவே இருக்கின்றது. இன்னும் ஆடையை இடுப்பில் கட்டிக்கொள்ள தெரியவில்லை. நாவோ மழலைச் சொற்களையே பேசுகிறது. விழிகளோ மிரண்டு பார்க்கின்றன. ஆனாலும் திருங்கடவன் மலை எனது தலைவனின் இருப்பிடம் என்று சொல்லக் கற்றிருக்கிறாள். (நம்மாழ்வார் திருவடிகளே சரணம்)

(“நீ பக்தனாய் இரு ஆனால் மூடனாய் இராதே” ஸ்ரீராமகிருஷ்ண பரம ஹம்சர்)

சூரியன், சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: ஏனையவை

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், லேசான நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right