18.10.2016 துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 02 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

2016-10-18 08:21:21

கிருஷ்ணபட்ச திரிதியை திதி பின்னிரவு 3.26 வரை. அதன் மேல் சதுர்த்திதிதி பரணி நட்சத்திரம் காலை 9.19 வரை. பின்னர் கார்த்திகை நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை. திரிதியை. சித்தியோகம். கீழ்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம் சுவாதி. சுபநேரங்கள் காலை 7.45– 8.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 3.00–  4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகைகாலம் 12.00– 1.30, வாரசூலம்-– வடக்கு (பரிகாரம்– பால்) கார்த்திகை விரதம். முருகப் பெருமானை வழிபடல் நன்று. சந்திரோதய கௌரி விரதம்.

மேடம்: பேராசை, நஷ்டம்

இடபம்: நிறைவு, பூர்த்தி 

மிதுனம்: சுகம், ஆரோக்கியம்

கடகம்: பணிவு, பாசம்

சிம்மம்: கவனம், எச்சரிக்கை

கன்னி: குழப்பம், சஞ்சலம்

துலாம்: சோதனை, சங்கடம்

விருச்சிகம்: அன்பு, பாசம்

தனுசு: நட்பு, உதவி

மகரம்: தெளிவு, அமைதி

கும்பம்: லாபம், ஆதாயம்

மீனம்: நினைவு, கவலை

நம்மாழ்வார் அருளிச்செய்த “திருவிருத்தம்” பாசுரம் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும் இந்நின்ற  நீர்மை இனியாம் உறாமை உயிரளிப்பான். எந்நின்ற யோனியுமாய் இமையோர் தலைவா மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே. பொருளுரை; உலகத்து உயிர்களைக் காக்க எத்தனை அவதாரமெடுத்தாய் என் துவாரகா கண்ணனே. எத்தனை அழுக்கான தேகத்தோடு பிறவியில் அழுந்தி உள்ளேன்.  இனியொரு பிறவி எனக்கு வேண்டாம் என்று உன்னைப் பிரார்த்திக்கின்றேன். நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

(பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும்.         –பிராங்ளின்)

செவ்வாய், சூரியன் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்: 5

பொருந்தா எண்கள்: 8, 2

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சிவப்பு, நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right