கி.பி. 2016 ஜனவரி மாதம் 01ஆம் நாள் மன்மதவருடம் மார்கழி மாதம் 16ஆம் நாள் வெள்ளிக்கிழமை

Published on 2016-01-01 14:45:40

கிருஷ்ணபட்ச ஸப்தமி திதி முன்னிரவு 10.43 வரை. பின்னர் அஷ்டமி திதி உத்தரம் நட்சத்திரம் முன்னிரவு 9.50 வரை. பின்னர் அஸ்தம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை ஸ்ப்தமி சித்தாமிர்த யோகம். மேல்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அவிட்டம், சதயம் சுபநேரங்கள் காலை 9.15 – 10.15 மாலை 4.45 – 5.45. ராகுகாலம் 10.30 – 12.00. எமகண்டம் 3.00 – 4.30 குளிகை காலம் 7.30 – 9.00. வாரசூலம் மேற்கு (பரிகாரம் – வெல்லம்)

மேடம் : பக்தி, ஆசி

இடபம் : லாபம், ஆதாயம்

மிதுனம் : நலம், ஆரோக்கியம்

கடகம் : லாபம், லஷ்மீகரம்

சிம்மம் : அமைதி, சாந்தம்

கன்னி : முயற்சி, முன்னேற்றம்

துலாம் :உற்சாகம், வரவேற்பு

விருச்சிகம் : அமைதி, தெளிவு

தனுசு : இன்பம், மகிழ்ச்சி

மகரம் : சுகம், ஆரோக்கியம்

கும்பம் : அமைதி, தெளிவு

மீனம் : பணிவு, பாசம்

வீரகேசரி வாசகர்கள் அனைவருக்கும் இனிய கி.பி. 2016ஆம் புத்தாண்டுஇ மகிழ்ச்சி கரமாக அமைய வேண்டி “துவாரஹா” நிலையவாசனான கண்ணன் திருவடிகளைப் பிரார்த்திக்கின்றேன். மார்கழி திருப்பாவை 16ஆம் பாசுரம். நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பாளே. எங்கள் தலைவரான நந்த கோபனுடைய மாளிகையை காப்பவளே. தோரணங்களையும் கொடிகளையும் உடைய வாயிலை காப்பவளே. மணிகள் கொண்ட கதவின் தாளை அகற்றிவிடு. ஆயர் குலச் சிறுமிகளை எங்களுக்கு மாயக்கண்ணன். நீலமணி நிறம் கொண்டவன். ஒலி எழுப்பும் பறையைக் கொடுப்பதாக நேற்றே வாக்களித்துள்ளான். அவன் துயில் எழும்படி திருப்பள்ளி எழுச்சிபாட நீராட வந்திருக்கின்றோம். அதனால் எங்களை ஏதாவது பேசி ஏமாற்றி எண்ணத்தை மாற்ற முயல வேண்டாம். நிலைக் கதவைத் திறந்துவிடு. (ஆண்டாள் திருவடிகளே சரணம்)

சூரியன், சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 5

பொருந்தா எண்கள் : 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், லேசான நீலம்

இராமரத்தினம்ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)