03.10.2016 துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 17 ஆம் நாள் திங்கட்கிழமை

2016-10-03 07:41:35

சுக்கில பட்ச துவிதியை திதி காலை 9.16 வரை. பின்னர் திரிதியை திதி சுவாதி நட்சத்திரம்பின்னிரவு 5.28 வரை. பின்னர் விசாகம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை. திரிதியை அமிர்த யோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் ரேவதி. சுபநேரங்கள் காலை 6.15– 7.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 7.30– 9.00 எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார சூலம் கிழக்கு (பரிகாரம்– தயிர்) வைதிருதி சிரார்த்தம் சுபநாள்.

மேடம்: இன்பம், மகிழ்ச்சி

இடபம்: களிப்பு, சுபநிகழ்ச்சி

மிதுனம்: சோதனை, சோர்வு

கடகம்: சுகம், ஆரோக்கியம்

சிம்மம்; கவனம் எச்சரிக்கை

கன்னி: ஆர்வம், உற்சாகம்

துலாம்: மறதி, மனக்கவலை

விருச்சிகம்: சிக்கல், சங்கடம்

தனுசு: ஜெயம், விரக்தி

மகரம்: துணிவு, அனுகூலம்

கும்பம்: லாபம், லஷ்மீகரம்

மீனம்: ஆக்கம், அதிர்ஷ்டம்

நவராத்திரி விரதம் துர்க்கை பூஜை. மாதா மரகத சியாமா மாதங்கி மதசாலினி என்று அன்னை பராசக்தியின் பெருமையை போற்றுகின்றார் கவி காளிதாஸர். பூரணியாகவும் பராசக்தியாகவும் பிரகிருது தேவதையாகவும் போற்றப்படுகின்றாள் அன்னை துர்க்கா தேவி. அவள் அவதார பெருமையை ‘தேவி பாகவதம்” கூறுகின்றது. காளி தேவியான துர்க்கையை வழிபட்டு பஞ்சபாண்டவர்கள் பல அரிய வரங்களைப் பெற்றதாக மகாபாரதம் கூறுகின்றது. “சொல்லுக் கடங்காவே பராசக்தி சூரத் தனங்கள் எல்லாம் வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழியென்றே துதிப்போம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி சக்தியென்றே சொல்லு சங்கடங்கள் யாவையும் வெல்லு.

“எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து ஒருவனையும் நம்பாமல் இருப்பது பேராபத்து”

 – ஆபிரகாம் லிங்கன்

குரு, ராகு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.   

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிகப்பு

இராமரத்தினம் ஜோதி (தெகிவளை ஸ்ரீ விஷ்ணு கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right