28.09.2016 துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 12 ஆம் நாள் புதன்கிழமை

2016-09-28 07:51:43

கிருஷ்ணபட்ச திரயோதசி தசி திதி பின்னிரவு 3.52 வரை. அதன் மேல் சதுர்த்தசி திதி. மகம் நட்சத்திரம் முன்னிரவு 7.44 வரை. பின்னர் பூரம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை திரயோதசி. சித்தாமிர்த யோகம். கீழ் நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  உத்திராடம், திருவோணம். சுபநேரங்கள் காலை 09.15 – 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 12.30– 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார சூலம் – வடக்கு. (பரிகாரம் –பால்) கிருஷ்ணபட்ச மகா பிரதோஷம். சகல சிவாலயங்களிலும் ஸ்ரீ நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். ஆராதனை வழிபாடு. கஜச்சமய மகா மாளயம் (விதவைகளுக்கு). 

மேடம்: அமைதி, சாந்தம்

இடபம்: தனம், சம்பத்து

மிதுனம்: பகை, எதிர்ப்பு

கடகம்: இலாபம், லக் ஷ்மீகரம்

சிம்மம்: ஜெயம், புகழ்

கன்னி: சோர்வு, அசதி

துலாம்: போட்டி, ஜெயம்

விருச்சிகம்: வரவு, இலாபம்

தனுசு: ஓய்வு, அசதி

மகரம்: உயர்வு, மேன்மை

கும்பம்: பிரீதி, மகிழ்ச்சி

மீனம்: உழைப்பு, உயர்வு

நம்மாழ்வார் பாசுரம், பத்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி. “திருமாலிருஞ்சோலை செஞ்சொற் கவிகாள் உயிர்காத்து ஆட்செம்மின் திருமாலிருஞ்சோலை வஞ்சகக் கள்வன் மாமாயன் நெஞ்சும் உயிரும் அவையுண்டு தானேயாகி நிறைந்தானே”. பொருளுரை: செம்மையான சொற்களை வைத்து பாடல் பாடுபவர்களே! உங்கள் உயிரை பாதுகாத்து கவி இயற்றுங்கள். திருமாலிருஞ்சோலை உறையும் வஞ்சக் கள்வன், துவாரகா கண்ணன், மாயக்கள்வன் என் இதயத்தையும் ஆத்மாவையும் ஆக்கிரமித்துக் கொண்டவன். தானேயாகி என்னுள் நிலைத்து விட்டான். உங்களையும் இல்லாமல் செய்து விடுவான். எச்சரிக்கையாய் இருங்கள்.

"உண்மையே கடவுள் அதைவிட மேல் ஒன்றுமில்லை” – வால்மீகி

சூரியனின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8 

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right