26.09.2016 துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 10 ஆம் நாள் திங்கட்கிழமை

2016-09-26 08:09:25

கிருஷ்ணபட்ச ஏகாதசி திதி பின்னிரவு 4.00 மணிவரை. அதன் மேல் துவாதசி திதி. பூசம் நட்சத்திரம் மாலை 6.54 வரை. பின்னர் ஆயில்யம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை ஏகாதசி. சித்தயோகம். மேல் நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மூலம், பூராடம். சுபநேரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார சூலம் கிழக்கு (பரிகாரம் –தைலம்) இன்று கிருஷ்ணபட்ச ஏகாதசி விரதம். இதற்கு அஜ ஏகாதசி என்றும் பெயர். உபவாசம் இருந்து மகா விஷ்ணுவை வழிபடுவதால் பாவங்கள் விலகும். சகல காரிய சித்திகள் ஏற்படும்.

மேடம்: நட்பு, சிநேகம்

இடபம்: ஆதரவு, அன்பு

மிதுனம்: ஆதாயம், லாபம்

கடகம்: ஆர்வம், பற்று

சிம்மம்: தெளிவு, வெளிச்சம்

கன்னி: தேர்ச்சி, ஆராய்வு

துலாம்: பணிவு, அடக்கம்

விருச்சிகம்: கவனம், எச்சரிக்கை

தனுசு: நேர்மை, நிதானம்

மகரம்: அலைச்சல், தொந்தரவு

கும்பம்: அனுகூலம், காரியசித்தி

மீனம்: குழப்பம், கலக்கம்

நம்மாழ்வார் அருளிச் செய்த பத்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி. திண்ணம் நாம் அறியச் சொன்னோம். செறி பொழில் அனந்தபுரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார். பொருளுரை: திருவரங்கத்தில் வீரசயனப் பெருமானாகவும் பத்ரிகாசிரமத்தில் யோகசயனப் பெருமானாகவும் திருக்குடந்தை கும்பகோணத்தில் உத்தான சயனத்திலும் திருங்கடல் மல்லையில் பாற்கடலும் வேண்டாம், பாம்பணையும் வேண்டாம் என்று தலசயனப் பெருமானாக தரையில் சயனித்து அருள் செய்யும் பெருமானே!’ இங்கு திருவனந்த புரத்தில் அனந்த சயனத்தில் உன் அடியார்கள் உன்னை திருமஞ்சமாட்டி, பூக்களால் உன்னை நாமாக்களால் அர்ச்சனை செய்து வர என்ன புண்ணியம் செய்தோம். நம் பிறவி என்னும் சங்கிலியை உன்னைத் தவிர வேறு யாரால் அறுக்க முடியும். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

சனியின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

பொருந்தா எண்கள்: 8, 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பச்சை, நீலம்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right