20.09.2016 துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 04ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

2016-09-20 07:53:43

கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதி மாலை 4.26 வரை. அதன்மேல் பஞ்சமி திதி. பரணி நட்சத்திரம் பின்னிரவு 1.16 வரை. பின்னர் கார்த்திகை நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சதுர்த்தி. சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அஸ்தம் சித்திரை. சுபநேரங்கள்: காலை 7.45 – 8.45, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30. வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்) மஹா பரணி. பிதுர் கடன் இயற்றுதல், அன்னதானம் என்பன நன்று.

மேடம்: முயற்சி, காரியசித்தி 

இடபம்: இன்பம், மகிழ்ச்சி 

மிதுனம்: புகழ், பெருமை 

கடகம்: செலவு, பற்றாக்குறை 

சிம்மம்: சுகம், ஆரோக்கியம் 

கன்னி: வெற்றி, அதிர்ஷ்டம் 

துலாம்: உண்மை, உறுதி 

விருச்சிகம்: சுமை, சங்கடம் 

தனுசு: தனம், சம்பத்து 

மகரம்: பக்தி, ஆசி 

கும்பம்: தடை, தாமதம் 

மீனம்: அன்பு, பாசம் 

நம்மாழ்வார் பாசுரம். நன்காம் பத்து. ஐந்தாம் திருவாய் மொழி “வீற்றிருந்து ஏழுலகும் தளிர்கோல் செல்ல, வீவுஇல்சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான் தன்னை” பொருளுரை -  வைகுண்டத்தில் வீற்றிருந்தபடி ஏழு உலகங்களையும் தனித்து காக்கும் ஆற்றல் உன்னைத் தவிர வேறு எந்தத் தெய்வத்திடம் உண்டு பெருமானே! மகாபாரதத்தில் அன்று அஸ்தினாபுரத்தில் கௌரவர் சபையில் திரௌபதை துகிலுரியப்படுகின்றாள். நீ துவாரகாவில் இருந்தப்படியே அவளுக்கு வஸ்திரதானம் செய்தாய். “ஆதிமூலமே” என்று யானை கூப்பிட வைகுண்டத்தில் இருந்து நீ செல்லுமுன்பதாக உன் சுதர்ஸன சக்கரத்தை ஏவி முதலையைக் கொன்று யானையைக் காத்தாய். உன்னை போற்றிப்பாடி சொற்களாகிய மாலைகளைச் சூடும் பாக்கியம் பெற்ற அடியேனுக்கு ஏழ்பிறவிகளிலும் எந்த குறையுமில்லை. (நம்மாழ்வார் திருவடிகளே சரணம்)

 (“பணிவு என்பது தாழ்மையின் சின்னம் அல்ல, அது உயர்ந்த பண்பின் அறிகுறி" – எடிசன்)

சந்திரனின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1,5, 6,7

பொருந்தா எண்கள்: 8, 9

அதிர்ஷ்ட வர்ணம்: இலேசான பச்சை, மஞ்சள் 

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right