30.12.2015 மன்­மத வருடம் மார்­கழி மாதம் 14 ஆம் நாள் புதன்­கி­ழமை.

Published on 2015-12-30 07:50:17

கிருஷ்ண பட்ச பஞ்­சமி திதி முன்­னி­ரவு 7.02 வரை. அதன் மேல் சஷ்டி திதி. மகம் நட்­சத்­திரம் மாலை 5.15 வரை. பின்னர் பூரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை பஞ்­சமி. சித்­தா­மிர்த யோகம், கீழ்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் உத்­த­ராடம், திரு­வோணம். சுப­நே­ரங்கள் காலை 9.15– 10.15, பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 12.00 1.30 எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00 வார சூலம் வடக்கு (பரி­காரம்– பால்)

மேடம் : தெளிவு, அமைதி

இடபம் : உதவி, நட்பு

மிதுனம் : பக்தி, ஆசி

கடகம் : நோய், வருத்தம்

சிம்மம் : நிறைவு, பூர்த்தி

கன்னி : விருத்தி, யோகம்

துலாம் : புகழ், பாராட்டு

விருச்­சிகம் : பணம், பரிசு

தனுசு : சுகம், ஆரோக்­கியம்

மகரம் : நன்மை, அதிர்ஷ்டம்

கும்பம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

மீனம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இன்று சகல விஷ்ணு ஆல­யங்­க­ளிலும் திரு­வாய்­மொ­ழித்­தி­ருநாள். சாற்று முறை மார்­கழி திருப்­பாவை ஓதுதல் வைபவம் பாசுரம் 14. "உங்கள் புழக்­கடைத் தோட்­டத்து வாயினுள் எழுந்­திராய்! சங்­கொடு சக்­கரம் ஏந்தும் தடக்­கையன் பங்­கைய கண்­ணனைப் பாடே­யோ­ரெம்­பாவாய்" உரை; உங்கள் வீட்டுத் தோட்­டத்தில் உள்ள வாவியுள் செங்­க­ழுநீர்ப் பூக்கள் மலர்ந்து ஆம்பல் மலர்­களைப் பார்கையில் சிகப்பு ஆடை­ய­ணிந்த தூய்­மை­யான பற்­களைக் கொண்ட கோயில் பூஜை செய்யும் பாக்­கியம் பெற்ற அர்ச்­ச­கர்கள் சங்கு ஊதி கோயில் கதவை திறக்­கின்­றார்கள். எங்­களை எழுப்­பு­வ­தாகச் சொன்ன நீ இன்­னமும் படுத்துக் கொண்­டி­ருக்காய். வெட்­க­மற்ற நாவு­டை­ய­வளே! எழுந்­திரு பெண்ணே! சங்கு சக்­க­ரங்­களை ஏந்­தி­யுள்ள பெரிய கைகளை உடை­ய­வனை தாமரை போன்ற விழி­களை உடை­ய­வனை கண்­ணனைப் பாடு­வ­தற்கு எழுந்­தி­ருப்­பா­யாக.

குரு, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளான இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9, 1

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சிகப்பு, ஊதா நிறங்கள்

இராமரத்தினம்ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)